உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்*

திரு. S. வையாபுரிப் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றவுடனே அவர் ஆங்கிலத்தில் எழுதிய. "தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு”என்னும் நூல் 1956-இல் வெளியிடப்பட்டது. (History of Tamil

Language and Literature, by Prof. S. Vaiyapuri Pillai, New Century Book House, Madras 2.) இந்த நூலிலே பிள்ளையவர்கள் பல தவறான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். சில செய்திகளைத் திரித்துக் கூறுகிறார். சில செய்திகளை மறைத்துக் கூறுகிறார். இந்த நூலைப் படிக்கின்ற வெளி நாட்டவர் தவறான கருத்துக்களை உண்மை எனக் கருதிக் கொள்கின்றனர். நமது நாட்டிலுங் கூடப் பலர், பிள்ளையவர்களின் பிழையான கருத்துக்களை உண்மைச் செய்திகள் என்று நம்புகின்றனர். பிள்ளையவர்கள் கூறுகிற தவறான செய்தி ஒன்றை இங்கு எடுத்துக் காட்டுவோம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றி இந்த நூலில் இவர் இவ்வாறு

எழுதுகிறார்:-

66

இந்தக் காலத்தின் நிலமை இந்தப் பதிகங்களில் (சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பதிகங்களில்) காணப்படுகிறது, ஜைன சமயத்தினால் சைவ சமயத்துக்கு இருந்த அபாயகரமான நிலை மறைந்து போய்விட்டது. சுந்தரமூர்த்தியின் தேவாரப் பாடல்களிலே ஜைனர்களைப் பற்றிய ஒரு குறிப்புக்கூட இல்லை" (பக்கம் 110)

"The condition of the times is reflected in these Hymus. The danger to the Saivite religion from the Jains had disappeared and there is not even a single reference to the Jains in Sundarar's Hymns".

பிள்ளையவர்கள் இவ்வாறு எழுதுவது உண்மைக்கு மாறானது. உண்மைக்கு மாறானது மட்டும் அல்ல; உண்மையை மறைத்துக் கூறுகிறார். பிள்ளையவர்கள் சைவர் என்கிற முறையில் சுந்தரர் தேவாரத்தைப் படித்திருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டாலும், சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் என்கிற நிலையிலாவது சுந்தரர் தேவாரத்தைப் படித்திருக்கவேண்டும். அப்படி * தமிழ்ப்பொழில் 35:2, 1959.