உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

என்று அவர் கூறுகிறார்.

“ஒன்பதொ டொன்றோ டேழு பதினெட்டோ டாறு

முடனாய நாள்கள் அவைதான்

அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

273

என்று பிரயாணத்திற்கு ஆகாத பன்னிரண்டு நட்சத்திரங்களை அவர் கூறுகிறார். இதில் ஒன்பது என்றது கிருத்திகைக்கு ஒன்பதாவதாகிய பூரம், ஒன்று என்றது கிருத்திகை, ஏழு என்றது ஆயிலியம், பதினெட்டு என்றது பூராடம். ஆறுடன் ஆய நாட்கள் என்றது மேலே கூறிய நான்கு நட்சத்திரங்கள் அல்லாத ஏனைய எட்டு நட்சத்திரங்கள். அவை: பூரட்டாதி, மகம், கேட்டை, பரணி, சுவாதி, விசாகம், ஆதிரை, சித்திரை

என்பன.

66

'தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய், ஆன சொன்மாலை” என்றும் கூறுகிறார்.

இதனால், இவர் காலத்தில் நாள்கோள் பார்க்கும் வழக்கம் உண்டென்பது தெரிகிறது.

8. சமணமுனிவர் குன்றுகளில் தங்கியது

சமண முனிவர்கள் மலைக் குகைகளில் தங்கி தவம் செய்து வந்தனர். மலைக் குகைகளுக்குப் பாழி என்பது பெயர். குன்றுகளிலுள்ள பாழிகளில் சமண முனிவர் தங்கியிருந்த செய்தி, அப் பாழிகளில் இப்போதும் காணப்படுகிற கற்படுக்கைகளினாலும், கல்வெட்டுச் சாசனங்களினாலும் தெரிகிறது. ஞான சம்பந்தரும் தமது தேவாரத்தில் "பாழியுறை வேழநிகர் பாழமணர்” என்று கூறுகிறார். அன்றியும், இவர் காலத்திலே மதுரை மாநகரத்தைச் சூழ இருந்த யானை மலை முதலிய மலைகளிலே சமண முனிவர் இருந்த செய்தியையும் கூறுகிறார்:

66

99

ஆனைமாமலை யாதியாய விடங்களில் பல அல்லல் சேர் ஈனர்கட் கெளியேனலேன் திருவாலவாய் அரனிற்கவே.' என்று திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். இவர் கூறுகிற யானை மலையாதியாய இடங்கள் என்பது மதுரையைச் சூழ்ந்துள்ள யானை மலை, நாகமலை, இடபமாலை, சமணமலை முதலான எட்டு மலைகள்.