உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

நான்காமடி

பதப்பொருள்

பிரமபுரத்துறை

279

பிரமபுரமென்கிற

சீகாழிப்பதியிலே வீற்றிரா நின்ற, பெம்மான் - கர்த்தா வானவன், எம்மான் – என்னுடைய சுவாமி.

பொழிப்பு : பிரமபுரமென்கிற சீகாழிப் பதியிலே வீற்றிரா நின்ற கர்த்தாவானவன் என்னுடைய சுவாமி.

பெரியோனும்

எனக்குயிரானவனும்

என்னை யொக்க

வந்தவனும் சீகாழிப் பதியில் வீற்றிருக்குங் கடவுளெனக் கூட்டிப் பொருள் கொள்க.

விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன்

விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன்

விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன்

விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன்

2

முதலடி

பதபொருள் : விண்டு - மலை; அலர் -ஒலி, பொழில் - உலகம், அணிவு - அகப்படுதல், ஏண் - பெருமை, நுபுரம் சிலம்பு, தரன் - தரித்துள்ளவன்.

பொழிப்பு : அஷ்டகுல பர்வதங்களும், ஒலி சிறந்த தரிசு மணியாகவும், அகில லோகங்களையும் உள்ளே யகப்படுத்துந் தன்மையவாயும், பெரிதாயுமுள்ள திருச்சிலம் பினைத் தரித்துள்ளவன் (நூபுரம் எனற்பாலது, நுபுரம் எனக் குறுகிநின்றது.)

இரண்டாமடி

-

பதப்பொருள் : விண்டு - விஷ்ணு, அலர் - புறனுரை, பொழில் - அரசினிழல், அணி - பொருந்தி, வேணு - விருப்பம், புரத்து அரன் – புரத்தையரித்தவன்.

-

பொழிப்பு : விஷ்ணுவின் புறனுரையாகிய சிவதூஷணத்தை அரசமரனீழலில் அவனுடனிருந்து விரும்பியுள்ள முப்புரங்களைச் சங்கரித்துள்ளவன். (அண்ணி யெனற்பாலது, அணியென

இடைக்குறைவாய் நின்றது.)