உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

பழைய உரை உண்டு. மகா வித்வான் காஞ்சீபுரம் சபாபதி முதலியார் அவர்கள் 1864-இல் அச்சிட்ட தேவாரத் திருமுறையில், அந்தப் பழைய அச்சிட்டிருக்கிறார்கள். வுரையை ஈண்டும்

உரையை

தருகின்றேன்.

அவ்

பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

1

முதலடி

பதபொருள் : பிரமம் ஞானாகாசமாகிய பராசத்தியை, புரத்துறை – அந்தப் பரிபூரணத்தை மிகுதியாக வியக்கப்பட்டது, பெம்மான் - பெருமான், எம்மான் - எந்தப் பெரியோன்.

பொழிப்பு : ஞானாகாசமாகிய பராசத்தியான பரி பூரணத்தை மிகுதியாக வியந்து அந்தப் பராசக்திக் கதீதமாகிய சுகமே வடிவாய் முதல் நடு விறுதி காணப்படாத வஸ்து எந்தப் பெரியோன்.

இரண்டாமடி

பதப்பொருள்: பிரமபுரத்து

மேல் நிலத்து, உறை - தண்ணீர்,

பெரும் - விருப்பம், மான் - மான்போலும் விழியுடைய பெண், எம் எம்முடைய, ஆன் - ஆன்மா.

-

பொழிப்பு : மேல் நிலமாகிய ஆகாசத்தின்கண்ணே யோடா நின்ற கங்காதேவியை விரும்பித் திருமுடியிலே வைத்தவன், எம்மை நீங்காத நிலைமையையுடைய எமதுயிர்.

மூன்றாமடி

-

பதப்பொருள்: பிரமம் - பிரமதத்துவம், புரம் - சரீரம், உறை எண்ணுதல், பெம் - ஆசை, ஆன் - அமையாமை, எம்மான் – என்னை யொக்க வந்தவன்.

என்னை

பொழிப்பு : பிரரூபத்திலே யெண்ணப்பட்ட முத்தியிலே விடுகைக்கு அமையாத விருப்பமுள்ளவனாயென்னை யொக்க வந்தவன்.