உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

முதலடி

287

பதப்பொருள் : பொன் - பொலிவு, நடி - கூத்துடையான், மாது பத்திரகாளி, அவர் – பூத கணங்கள், சேர் - தங்குதல், புறவத்தவன் சுடுகாட்டிலுள்ளவன்.

பொழிப்பு : பொலிவினையுடைய மாயாநிருத்தம்புரிகின்ற பத்திரகாளியும், பூத பசாசும் பொருந்திய மயானமே திருக்கோயிலாக வுள்ளவன்.

இரண்டாமடி

பதபொருள் : பொன் - தூய்மை, அடி – வழி, மாதவர் தபோதனர், சேர் முல்லை நிலம், தவன் – தவம் புரிந்துள்ளான்.

திரட்சி, புறவம்

-

பொழிப்பு : சுத்தமான வழியைத் தரப்பட்ட மகாஇருஷிகள் திரண்டு தவம் பண்ணாநிற்கும் ஆரணியத்தில் தனித்துத் தவம்புரியா நிற்குந் தபோதனன்.

மூன்றாமடி

பதப்பொருள் : பொன் - இலக்குமி, அடி - ஆபரணத்தொகுதி, மாது அவர் - இருடிபத்தினிகள், சேர்பு உறு - பிச்சையிட வந்தணைதல், அவத்தவன் - கலை சோர்தலைச் செய்த நிருவாணி.

பொழிப்பு : அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இலக்குமியையொத்த இருடிபத்தினிகள் பிச்சையிட வந்தணையு மிடத்துத் தனக்குள்ள நிருவாணத்தை அவர்களுக்குக் கொடுத்தவன். நான்காமடி

பதப்பொருள் : பொன் - பொன்னாற் செய்யப்பட்ட பாடக நூபுர காலாழிகள் முதலியவு மிடப்பட்ட, அடி – பாதம், மாதவர் - கன்னியர், சேர் - இனமாய் விளையாடுதல், புறத்தவன் - திருப்புறவமென்கின்ற திருப்பதியில் வாழ்கின்றவன்.

பொழிப்பு : பொன்னாற் செய்யப்பட்ட பாடக நூபுசாதிகளைப் பாதங்களிலே யணிந்துள்ள கன்னியர் திரண்டு விளையாடும் புறவமென்னுத் திருப்பதியில் வாழ்கின்ற சிவன். புறவம் என்பதுஞ் சீகாழி