உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

293

பொழிப்பு: திருக்கழுமல மென்னும் மூவாப்பழங் கிழமைப் பன்னிரு பெயர்பெற்ற அனாதி மூலமாகிய பதியிடத்துக் கவுணிய கோத்திரத்திலே தோன்றப்பட்ட யான் நிவேதிக்கப்படும் காட்டாகிய இப் பாடலைக் கீழ்ச் சொன்னவற்றிலும் மலத்திரயங்களிலும் அழுந்தா நின்ற ஒருத்தராகிலும் பலராகிலும் உரைசெய்வார் உயர்ந்தாரே யாதலா லிப்பாடலை யிடைவிடாமலுரை செய்வீராக.

காட்டு என்பது, கட்டெனக் குறுகிநின்றது.

1.

அடிக்குறிப்புகள்

இங்கு ஞானசம்பந்தர் தேவாரம் மட்டும் ஆராயப்படுகிறது. இவர் காலத்திலிருந்த நாவுக்கரசர் தேவாரம், இந்நூலாசிரியர் எழுதியுள்ள மகேந்திரவர்மன் என்னும் நூலில் ஆராயப்பட்டிருக்கிறது.