உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

கருப்பாசைய நீரின் கண்ணே சிரமுதலாகிய அவயவமாகத் தோற்றிப் பூமியின்கண் செனித்துப் பரிணமித்துப் பின்பு தேய்ந்து மரிக்கின்ற சென்மத்தையும்.

(பரிணமித்தல் - வேறுபடுதல்.)

இரண்டாமடி

பதப்பொருள் : கழு - கழுவப்படும், மலம்உது - ஆணவமலமு மற்றதனுடன் சுட்டிச் சொல்லப்பட்ட மாயா மலத்தையுங் கன்ம மலத்தையும், பதி - பாதி, கவுணி - உள்ளே அகப்படுததிக்கவுளிகரித்துக் கொள்ளுதல், அன்கண் - ஆத்துமானிடத்து, துரை - இறைவர்.

பொழிப்பு : கீழ்ச் சொல்லிப்போந்த சென்மத்தையுங் கழுவிமலத் திரயங்களையுங் கழுவாநிற்கும், (என்றபதம் நிற்க. இனிச் சிவனது நாமமுரைக்கற் பாற்று.) தனது பாதியாகிய திருவருளினாலே என்னை யகப்படுத்திக் கவுளி கரித்துக்கொண்டந்த அருள்வழியாக என திடத்தி விடையறாமல் வாழுந் தன்னை யெனக்குத்தந் தடிமைகுலையாமலெக் கண்ணும்விட்டு விளங்குங் கர்த்தர்.

பாதி எனற்பாலது பதியெனக் குறுகிநின்றது.

மூன்றாமடி

-

பதப்பொருள் : கழும் மயக்கம், அலம் - அலக்கண் படுதல், அமுது - அமுதம், பதி கர்த்தர், க - சிரசு, உணியன் சிரசு, உணியன் - உண்ணப் பட்டவர், கட்டு - விளக்கம், உரை - பொன்.

பொழிப்பு: மாயா மயக்கத்தின்கண்ணே மயங்கிப் பெத்தமுத்தி யிரண்டுந் தெரியாமல் திண்டாடப்பட்ட மலபோதர்க்கு அமுதம் போன்று அரிதாயுள்ளவனுமாய் விட்டு விளக்கப்படா நின்ற பொன்னு ருவையுடையவனாய்ச் சிருஷ்டிக்குக் கர்த்தாவாகிய பிரமனது சிரக் கபாலத்திலே பிச்சைகொண்டு நுகருங் கருணையாளனே.

நான்காமடி

பதப்பொருள்: கழுமல முதுபதி - கீழ்ச் சொன்ன பதியின்கண், கவுணியன் – கவுணிய கோத்திரத்துவந்த மறையோனாகிய யான், கட்டு காட்டு, உரை - உரைப்பீராக.