உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

291

வுருவாக நினைத்துத் துவராடையாலேயுடம்பைச் சூழப்பட்ட பௌத்தரும்.

மூன்றாமடி

பதப்பொருள் : கொச்சையள் பேதைத் தன்மையுடைய மச்சியா கந்தி, நலை - புலப்படாநின்ற அவளது நலத்தைக் கருதி, கூடு -சரீரம், அகில்ஆர் - அகில்மணம் பொருந்திய, உடன் - அத்தன்மை யாளுடன், மூடரே - மொய்க்குமாறு பண்ணினது அது பொருந்துதல்.

பொழிப்பு : பேதைத் தன்மையையுடைய மச்சிய கந்தியினுடைய நலத்தைக் கொள்ளும்பொருட்டு அவளது சரீரமெல்லாம் சுகந்த மொய்க்கும்படி யவளுடனே பொருந்திய பராசரனாகிய மகாவிருடி வந்து சிவனைப் பொருந்தியருச்சிக்கப் படுதலால்.

நான்காமடி

பதப்பொருள்

: - கொச்சை- கொச்சையாகிய பராசரன்

-

பேராலுள்ள கொச்சையென்னுந் திருப்பதி, அண்ணலை -கர்த்தாவை, கூடகிலார் நேர்படமாட்டாதார், உள்தல் உள்ளுதல், மூடரே - அந்தகார நிறைந்த போதத்தை யுடையவரே.

பொழிப்பு : பராசர முனிவனாற் பூசிக்கப்பட்டு அவன் பெயரால் பெயர் பெற்றுள்ள கொச்சை நகரென்னுந் திருப்பதியிலே எழுந்தருளி யிரா நின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி வழிபட மாட்டார் களது நினைவு எவ்வறிருக்கு மென்னில், மழைக்கா லிருளும் வெளி தென இருண்ட மயக்கத்தை யுடைய ஆணவ போதமா யிருக்கும்.

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

12

முதலடி

பதப்பொருள் : கழுமலம் - மிகுதிப்பட்ட குற்றம், அமுது செலம், பதிக்க விளைவிக்க, உள்நி - உள்ள நீ, கட்டு கட்டுண்டல், உரை - தேய்தல்.

வடிவாகக்

பொழிப்பு: மிகுதிப்பட்ட தோஷமாயுள்ள சிக்கில சுரோணித மாகிய இருவகை நீரின்கண் பதிந்து விளைதற்குள்ள நீயுமாயந்தக்