உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

-

ஐயோ உள்ளபடி கருதிச் சிவனைப் பெறாமல் அவர் கருதியதே தென்னில், அன்னியமே கண்டனர்.

(கண் எனற்பாலது காண் என நீண்டது.)

நான்காமடி

பதப்பொருள் : காழியான் - காழிப்பதியினுள்ளான், அயன் ஐயன், உள் - என்னறிவிலுண்டான, அவா ஆசை, காண்பரே தரிசிப்பரே.

.

பொழிப்பு : என் பொருட்டாற் காழியென்னுந் திருப்பதியைப் படைத்தானை என்னையனை எனதாசையைக் கீழ்ச்சொன்ன விருவர்களும் தாங்கள் தேடுந் தேட்டப் பிறிவில் மயக்கத்திலே தெட்டமழித்துத் தோன்றா நிற்பவனைத் தேடி மறத்தலொழிந் தெவ்வாறு காண்பர்.

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே

முதலடி

11

பதப்பொருள்: கொச்சை - அறியாமையைப் பொருந்தியுள்ள ஆணவமலம், அண்ணலை பொருந்துதலை, கூடகிலார் - மாறு பட்டார், உடல் - உடலாலே, மூடரே- மூடாரே.

பொழிப்பு: ஆணவ மலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலு மந்திரதனுவாலு மறைக்கப்படார்கள்.

(மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகி நின்றது.)

இரண்டாமடி

பதப்பொருள்: கொச்சை - புலால் நாற்றம், அண்ணல் அணுகுதல், கூடகிலார் - மனம் பொருந்தமாட்டாதார், உடல் மூடரே சரீரத்தைப் புதைப்பரே.

-

பொழிப்பு: புலால் நாற்றத்தைப் பொருந்திய மெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது நிலைபெற்