உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இலக்கியம்

I

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் உண்டான இலக்கியங் களைப்பற்றி ஆராய்வோம். அக்காலத்தில் மக்கள் எல்லோரும் கல்வி கற்றிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், கற்றவருக்கு மதிப்பும் பெருமையும் இருந்தபடியால், மக்கள் கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார்கள். அக்காலத்தில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார், இயற்றமிழ்ப் புலவராகவும் இசைத் தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். அவர் தமது தேவாரத்தில், அக்காலத்துக் கல்வியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

66

“காவிரி புடைசூழ் சோணாட்டவர்தாம் பரவிய பாவிரி புலவர் பயிலுந் திருப்பனையூர்

என்றும்,

"கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கார்

கலைபயில் அந்தணர் வாழும் கலைய நல்லூர்

என்றும் கூறுவதிலிருந்து அவ்வூர்களின் கல்வி நிலையை உணரலாம்.

கடவுளே கல்வியாகவும் கலைப்பொருளாகவும் புலவராகவும் புலவர்களுக்குத் தலைவராகவும் இருக்கிறார் என்று கூறுகிறார்.

66

“கற்ற கல்வியிலும் இனியானைக்

காணப் பெறுமவர்க் கெளியானை

என்றும்,

"பல்கலைப் பொருளே! படுதுயர் களையாய்'

என்றும்

992

  • மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'மூன்றாம் நந்திவர்மன் (1958) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.