உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

"நம்மானே தண்டமிழ் நூற் புலவர்க் கோர்

295

அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே

என்றும் அவர் பாடுகிறார்.

993

அவர் காலத்தில் இருந்த புலவர்கள், செல்வரைப் பாடிப் பரிசு பெறாமல் வாழ்க்கையில் துன்பமடைந்தார்கள் போலும். அப்புலவர் களைச் சுந்தரர் தமது திருப்புகலூர்ப் பதிகத்தில் கூறுகிறார்.

“மிடுக்கிலா தானை வீமனே விறல் விசையனே

66

வில்லுக்கியவன் என்று கொடுக்கிலாதானைப் பாரியே என்று

கூறினுங் கொடுப்பாரிலை

"நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல்

66

66

நடுங்கிநிற்கும் இக்கிழவனை வரைகள்போல் திரள்தோளனே என்று

வாழ்த்தினும் கொடுப்பாரிலை

'நலமிலாதானை நல்லனே என்று

நரைத்த மாந்தரை இளையனே குலமிலாதானைக் குலவனே என்று கூறினுங் கொடுப்பாரிலை

கற்றிலாதானைக் கற்று நல்லனே

காமதேவனை யொக்குமே

முற்றிலாதானை முற்றனே என்று

மொழியினும் கொடுப்பாரிலை’

“நோயனைத் தடந்தோளனே என்று நொய்ய மாந்தரை விழுமிய தாயன்றோ புலவோர்க்கெலாம் என்று சாற்றினும் கொடுப்பாரிலை

66

'எள்விழுந்திடம் பார்க்கும் ஆகிலும்

ஈக்கும் ஈகிலன் ஆகிலும்

வள்ளலே எங்கள் மைந்தனே என்று

வாழ்த்தினும் கொடுப்பாரிலை

99