உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

தையலாருக்கோர் காமனே சால

நலவழகுடை ஐயனே

கையுலாவிய வேலனே என்று கழறினுங் கொடுப்பாரிலை'

ஆகையினால்,

“பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை

புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர்கெடலுமாம்”

என்று கூறுகிறார்.

இறைவனாகிய சொக்கப் பெருமானே புலவராக இருந்து, பாணபத்திரன் பொருட்டுச் சேரமான் பெருமாளுக்குத் திருமுகப் பாசுரம் எழுதியதாக அக்காலத்தில் நம்பிக்கை இருந்தது.

நந்திவர்மன் காலத்துச் சாசனம் ஒன்று செய்யுளாகவே அமைந் திருக்கிறது. அந்தச் சாசனம் திருச்சி மாவட்டத்து லால்குடி தாலுகா திருவெள்ளறைக் கிராமத்தில், ஜம்புநாதசுவாமி கோயில் முன்புறத்தில் உள்ள கல்லில் எழுதப்பட்டிருக்கிறது. ஸ்ரீ தந்திவர்மனின் 3-வது

ண்டில் அது எழுதப்பட்டது. அதாவது தந்திவர்மனின் மகன் நந்தி வர்மனுடைய காலத்தில் எழுதப்பட்டது. இச்சாசனத்தின் நடுப்பகுதி, பிற்காலத்தவரால் செதுக்கிவிடப்பட்டதால், எழுத்துக்கள் மறைந்து

விட்டன.

படிக்கக்கூடியதாக உள்ள பகுதி, “பிரம்மதேயத்து உறுதியான் விழுப்பேரரையன் சாத்தன் மற்றவன் புகழ் நிற்க. இது பாடித் தந்தோன் பெருங்காவிதி சடையன் பள்ளி” என்று காணப்படுகிறது. எனவே, இச்சானச் செய்யுளைப் பாடிய புலவர் பெயர் பெருங்காவிதி சடையன் பள்ளி என்பது தெரிகிறது.

4

இனி, அக்காலத்தில் இருந்த வேறு புலவர்களையும் அவர்கள் இயற்றிய நூல்களைப் பற்றியும் ஆராய்வோம்.

பாரத வெண்பா

பெருந்தேவனார் என்னும் புலவர், நந்திவர்மன் காலத்தில் இருந்தார். இவர் பாரத வெண்பா என்னும் நூலை இயற்றினார். இவர்,