உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

297

நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. இந்நூல், பரிபாலகர் புகழைக் கூறும் செய்யுளினால் இதனை அறியலாம். அச் செய்யுள் இது.

"வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்

உண்மையால் பாரா ளுரிமையால் - திண்மையால்

தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோடு யார்வேந்தர் ஏற்பா ரெதிர்

இச்செய்யுள் தெள்ளாற்றுப் போர் வென்ற நந்திவர்மனைக் கூறுகிறது. இதன்கீழ், பெருந்தேவனார் எழுதும் வசனம் இது: “எல்லை யினிறைந்த எண்டிசை யுலகத்து மலையுமலையும் உள்ளிட்ட மண் மிசை முழுதும் மறையது வளர்க்க அல்லிபீடத் தரிவைக்குத் தன்னழ கமர் தோளே ஆலயமாக்கிய பல்லவர் கோமான் பண்டிதரலயனைப் பரவினேம்; இனி, ஈண்டிய தொல்புகழ் எழுமணிவரைத்தோட் பாண்டவர் நிலைமை யாதாயிற் றோவெனில்.

وو

இதிலிருந்து, தெள்ளாறெறிந்த நந்திவர்மனுக்குப் பண்டிதரால யன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டென்பது தெரிகிறது. இப் பெயரினால், இவன் பண்டிதர்களை ஆதரித்தான் என்பது தெரிகிறது.

இந்நூலை இயற்றிய பெருந்தேவனாரின் வரலாறு தெரியவில்லை. இவர் இயற்றிய பாரத வெண்பா, பாண்டவருக்கும் கௌரவருக்கும் நிகழ்ந்த பாரதப்போரைக் கூறுகிறது. பாரதக் கதை முழுவதையும் கூறவில்லை. உத்தியோக பருவம், வீடும் பருவம், துரோண பருவம் என்னும் மூன்று பருவங்களை மட்டும் கூறுகிறது. துரோண பருவத்தின் பிற்பகுதிச் செய்யுள்கள் மறைந்துவிட்டன.

பெருந்தேவனாரின் பாரத வெண்பா, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள். இடையிடையே சில விருத்தப் பாக்களும் அகவற்பாக்களும் காணப்பட்ட போதிலும் பெரிதும் வெண்பாவாலான நூலாதலால், இதற்குப் பாரத வெண்பா என்று பெயர் கூறப்பட்டது. இந் நூலின் பாக்கள் இனிய கம்பீரமான நடையுடையன. படித்து இன்புறத் தக்கன. ஆனால், இடையிடையேயுள்ள உரைநடை வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையாக இருக்கிறது. ஆகவே படிக்க இனிமை யற்றிருக்கிறது. தேவையில்லாத வடசொற்களைப் புகத்தித் தூய்மையைக் கெடுத்துவிட்டார் இதன் ஆசிரியர். வடமொழிச் சொற்கள் கலவாமல்