உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

பிறைச்சடைப் பெருமான் நல்கி

மறைந்தனன், பெரும்பாண் செல்வன்

உறக்கம்நீத்து ஆடிப்பாடி

உவகைம்மா கடலில் ஆழ்ந்தான்

9912

305

இது, சொக்கப் பெருமானே பாடியதோ அல்லது அக்கோயிலில் இருந்த புலவர் ஒருவர் பாடியதோ, உண்மை எதுவாக இருந்த போதிலும், திருவாலவாய் உடையார் பெயரினால் ஒரு திருமுகப் பாசுரம் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

பொன்வண்ணத் தந்தாதி

பொன்வண்ணத் தந்தாதி என்னும் இந்நூலை இயற்றியவர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நண்பரும் சைவ நாயன் மார்களில் ஒருவரும் ஆகிய, கழறிற்றறிவார் என்னும் சிறப்புப் பெயரையுடைய சேரமான் பெருமாள் நாயனார். இவர், இந்த அந்தாதியைத் தில்லைச் சிறறம்பலத்தில் அரங்கேற்றினார் என்று பெரிய புராணம் கூறுகிறது.

66

'ஆரா ஆசை ஆனந்தக் கடலுள்

திளைத்தே அமர்ந் தருளால்

சீரார் வண்ணப் பொன்வண்ணத் திருவந்

தாதி திருப்படிக் கீழ்ப்

பாராதரிக்க எடுத்தேத்திப் பணிந்தார்

பருவ மழை பொழியும்

காரால் நிகர்த்த அரியகொடைக் கையார்

கழறிற் றறிவார் தாம்

9913

இந்நூல், பொன்வண்ணத் தந்தாதி என்று பெயர் பெற்றதன் காரணம், பொன்வண்ணம் என்னும் சொல்லை முதலில் கொண்டு தொடங்குவதனால்தான். நூலின்முதல் சொல்லே அந்நூலின் பெயராக அமைவதும் உண்டு. வாக்குண்டாம், வெற்றிவேற்கை, கொன்றை வேந்தன், ஆத்திசூடி என்னும் நூலின் பெயர்கள், அந்நூல்களின் முதற் சொல்லினாலே அமைந்ததுபோல இந்நூலும் இதன் முதற் சொல்லினாலே பெயர்பெற்றது.

பொன் வண்ணத்தந்தாதி, நூறு கலித்துறைச் செய்யுட்களைக் கொண்டு அந்தாதித் தொடையாக இயன்றது. முதற் செய்யுளின் அந்தமும் அடுத்த செய்யுளின் ஆதியும் ஒன்றாகத் தொடங்குவதே