உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

நந்திக்கோவை

303

தெள்ளாறெறிந்த நந்திவர்மன்மேல் சில கோவைப் பிரபந்தங்கள் பாடப்பட்டன என்பது, நந்திக் கலம்பகச் செய்யுள் ஒன்றினால் தெரிகிறது. அச் செய்யுள் :

66

இந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம்

-

அந்தக் குமுதமே அல்லவோ நந்தி

தடங்கைப் பூ பாலன்மேல் தண்கோவை பாடி அடங்கப்பூ பால ரானார்’

இந்த உலகத்திலே இரவலர் என்று கூறப்படுவது குமுதம் என்னும் அல்லிப் பூ அல்லாமல் வேறு இரவலர் இலர். (இரவு + அலர் இரவலர் = இரவில் பூக்கும் குமுதம். இரவலர் = யாசிப்பவர்) ஏனென்றால் நந்திவர்மன்மீது இரவலர்கள் கோவைப் பிரபந்தம் பாடிப் பரிசில் பெற்றுப் பூபாலராக (மன்னர்களாக) ஆய்விட்டார்கள் என்பது இச்செய்யுளின் கருத்து. இதனால், வறுமை யடைந்த புலவர்கள் சிலர், இவ்வரசன் மீது கோவைப் பிரபந்தங்கள் பாடினார்கள் என்பது தெரிகிறது. அக்கோவை நூல்கள் இப்போது கிடைத்தில.

சுந்தரர் தேவாரம்

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப் பதிகங்களைப் பாடினார். அவர் பாடியவை முப்பத்தெண்ணாயிரம் பதிகங்கள் என்று கூறுவர்.

“பின்புசில நாளின்கண் ஆரூர் நம்பி

பிறங்குதிரு வெண்ணெய் நல்லூர்ப் பித்தா என்னும் இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும்

ஈறாய் முப்பத்தெண்ாயிரமதாக

முன்புபுகன் றவர்நொடித்தான் மலையிற் சேர்ந்தார் முறைகளெலாந் திருத்தில்லை மூதூர் தன்னில் அன்றவர்கை இலச்சினையால் வைத்தார் மன்ன!

ஆராய்ந்து தருகஎன அருளிச் செய்தார்.

பின்னர், இராசராசன் என்னும் அபயகுல சேகர மன்னன் காலத்தில் இப்பதிக ஏடுகளைச் சோதித்துப் பார்த்த போது, நூறு பதிகங்கள் தவிர மற்றைய பதிகங்கள் எல்லாம் மண் தின்றுபோயின.