உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

“நிறைந்த மறைகள் அர்ச்சித்த

நீடு மறைக்காட் டருமணியை

இறைஞ்சி விழ்ந்து பணிந்தெழுந்து

போற்றியாழைப் பழித்து என்னும்

அறைந்த பதிகத் தமிழ்மாலை

நம்பி சாத்த அருட்சேரர்

சிறந்த அந்தாதியிற் சிறப்பித்

தனவே யோதித்திளைத் தெழுந்தார்

9916

இந்த அந்தாதியைப்பற்றி இப்போது ஒன்றும் தெரியவில்லை. இந்நூல் முழுவதும் மறைந்துவிட்டது போலும். பதினோராந் திருமுறையைத் தொகத்த நம்பியாண்டார்நம்பி காலத்திலேயே இது மறைந்துவிட்டது போலும்.

அக்காலத்து இலக்கியங்களைப் பற்றிக் கூறினோம். இனி, அவ்விலக்கியங்களின் நடைப்போக்கை அறிய அவற்றிலிருந்து சில செய்யுட்களைக் காட்டுவோம்.

பாரத வெண்பா

பாரதப் போர் நிகழப்போவது உறுதியாய்விட்டது. போர்க்களத்தில் பாண்டவரைக் கொல்லக்கூடாது என்று வரம் கேட்கும்படி குந்தி தேவியைக் கண்ணன் கன்னனிடம் அனுப்புகிறான். தேர்ப்பாகனால் வளர்க்கப்பெற்ற ஒரு அனாதைப் பிள்ளை என்று தன்னைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் கன்னராசனிடம் குந்திதேவி சென்று, கன்னன், தான் பெற்ற மகன் என்று கூறுகிறாள். தன் பிறப்பை அறிந்த கன்னன் சொல்லுகிறான். அப்பகுதியின் வசன நடையையும் செய்யுள் நடையையும் கீழே காண்க:-

"பாண்டவர்க்கு முன்னோன்றலாய்ப் பாண்டு புத்திரனென்னும் படி ஆண்டகையாயது அறிந்திலேன்; என்பால் அருவினை நின்று அகற்றுகையால் நீயும் முன்னமே அறிவித்திலை; முடிவிற்காலத் தறிவித்தனை; இதற்கு என்ன வண்ணஞ் செய்வேனென்று இரு நிலத்துமிசை மயங்கி வீழ்ந்து, பின்னும் யாது சொன்னான் கன்னன்”:

இன்னா னெனவறியா வென்னை முடிகவித்து மன்னர் வணங்க வரசியற்றிப் - பின்னையுந்