உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

தன்னெச்சி லுண்ணாத்தகைமையான் றானுண்டா என்னெச்சி லென்னோ டினிது.

அன்றியும்,

கொன்னவிலுந் தேர்ப்பாக னென்னு குலம்பேசி

யென்னைப் பலரு மிகழ்ந்துரைப்ப - பின்னையுந்தா என்னெச்சி லென்னோடு முண்டானை யெங்ஙனே

யுன்னச் சிழப்பே னுரை.

தேர்ப்பாகன் மகனென்று என்னை மன்னர்

309

பலரும்

இகழ்ந்துரைப்ப, மற்று அவரை முனிந்து என்னுடன் இன்னடிசில் உண்டு என்னை மன்னர் வணங்க முடிகவித்த ராச ராசனை எங்ஙனே நான் விடுவேன் என்று பின்னுஞ் சொல்லுவான் கன்னன்:

மருவார்வண் டாரான் மணிமுடியான் செய்த வருடா னறியாதா ரில்லை - தெருளா

வழிகொடா வாறே யடுகளிற்றாற் காகிற் பழிகடாஞ் சாலப் பல.

என்று பின்னுஞ் சொல்லுவான் கன்னன்:

மதமா மழகளிற்றான் மற்றெனக்குச் செய்த வுதவி யுலகறியு மன்றே யுதவிதனை

-

நன்றுசெய்தோர் தங்களுக்கு நானிலத்தி னல்லோர்கள் குன்றுவதோ செய்ந்நன்றி கூறு.

என்றிவ்வகை சொல்லிப் பின்னுஞ் சொல்லுவான் கன்னன்:

பன்மணிகள் சிந்திப் பரந்து கிடந்ததுகண்

-

டின்மணிக் கென்புகுந்த தென்னாம னன்மணியைக் கோக்கோ பொறுக்கவோ வென்றானுக் கென்னுயிரைப் போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு.

இராசராசன் தேவி லக்ஷணையும் நானும் ஒரு தனி மண்டபத்து இருந்து சூதாடி நிற்ப, இராசராசன் துரியோதனன் மிருகவேட்டை போய்க் கதுமென வந்தது கண்டு மற்று அவளும் போகவென்று எழுந்திருப்ப, போகாமல் தடுக்கவென்று அவள் பூந்துகிலைப் பற்றி யான் பிடித்திட, மேகலாபரணம் அற்று நவரத்தினங்கள் நாற்றிசையும்