உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

சிந்தியிட்ட வெல்லைக்கண், அடல் வேந்தனும் வந்து என்னை அருகு அணைந்து மற்று இதற்குக் காரணம் என் என்னாது கருணையுடன் அகமலர்ந்து நகையரும்பி யானும் கோப்பேனோ பொறுக்குவேனோ வென்ற வேந்தனுக்கு என் நல்லுயிரை யுத்தமண்டலத்துத் துறப்பே னென்று பின்னுஞ் சொல்லுவான் கன்னன் :

உந்தமது புத்திரர்க்கா நல்லீராய் வந்தீர் நீர் இன்றென்மே லாசையிலை யுமக்கு – அன்று வடுவஞ்சிப் போவிட்டீர் மாண்டேனே லின்று நடவென்பீ ராரை நயந்து.

உம்முடைய புத்திரர்க்கு நல்லீராய் ஒரு காரணத்தினாற் போந்தீரல்லது, மற்று எனக்கு நல்லீராகில் முன்னமே வந்து என்பால் மருவீரோ என்னுமது நிற்க, அன்று குழவிக் காலத்தே வடுவஞ்சிப் பேராற்றிடை யொழுக்கிய ஞான்று புத்திரனென்று உணராது மித்திர பாவத்தை நோக்கினீர்; அன்று மற்று அந்த ஆற்றிடையின் மாண்டவ னன்றோ யான்? சன்ம சங்கற்பத்தால் வாழ்வேந்தன் திருதராஷ்டிரன் சூதன் எடுத்து இனிதுடன் வளர்க்க, வண்மையுடன் ராசராசன் துரியோ தனனும் தோழனாகக் கொண்டு அங்கவள நாட்டுக்கு அபிஷேகம் பண்ணிப் பாராஷ்டிரத்து க்ஷத்திரியரும் வணங்கப் பண்ணி என்னை யும் இவ்வகை பிரகாசிப்பித்தானில்லையாகில், நீரும் வந்து அழைப்பீர் ஆரை என்று எடுத்துரைத்துப பின்னுஞ் சொல்லுவான் கன்னன்:

நன்றாக மன் னெனக்கிந்த நாடறியக்

குன்றாத நன்மை பலகொடுத்தா -னென்றாலு மீண்டவன் செய்த வுதவியினை யான்மறந்தாற் றீண்டுவளோ தாமரையாள் சேர்ந்து.

இராசராசன் துரியோதனன் என்னை இன்னானென்று அறியாதே இன்னடிசில் உடனூட்டி, மன்னர் இகழாது நிற்க அங்கராசன் என்று அபிஷேகம் பண்ணி அங்கதேசம் எனக்கு அளித்துத் தன் பிராதாக்கள் தொண்ணூற்றொன்பதின்பமரும் சர்வ க்ஷத்திரியரும் தொழுது இறைஞ்சிக் கீழிருப்பதற்கத் தொலைவிலாத அசனமளித்து, ஏகாந்தத் துடன் இரு சரீரமும் ஒரு சரீரமாய் இனிதிருந்தோனுக்கு, எப்படி யாயினும் பழி பாவம் விளையாமல் காத்து இராச்சியம் பண்ணிக் கொடுத்துப் பின்பு வந்து பாண்டவரைப் பிராதாக்களெனக் காண்பேன்;