உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

உன்னுருவில் சுவைஒளியூ றோசை நாற்றத்

துறுப்பினது குறிப்பாகும் ஐவீர், நுங்கள் மன்னுருவைத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ வையகமே போதாதே, யானே வானோர் பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்

புவிக்கொழிலாஞ்சிவக் கொழுந்தைப் புகுந்தென்சிந்தை தன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத்

தலைப்படுவேன் றுலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.

இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி

இடர்ப்பாவங் கெடுத்(து) ஏழை யேனை யுய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல் சிவலோக நெறியறியச் சிந்தை தந்த

அருளானை ஆதிமா தவத்துளானை

ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற பொருளானைப் புள்ளிருக்கம் வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோல மாய நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன் நல்லாரோ(டு) இசைந்திலேன் நடுவே நின்ற விலங்கலேன் விலங்கலா தொழிந்தே னல்லேன் வெறுப்பனவே மிகப்பெரிதும் பேசவல்லேன்

இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்

என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து

தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்(கு) ஏகாந்தர் அல்ல ராகில் அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோ யராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்பர் ஆகில்

அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.

331