உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

டாறங்கம் ஆய்ந்துகொண்டு பாடினார் நால் வேதம்" என்றும், "வேதியன்காண் வேதவிதி காட்டினான் காண்” என்றும் வடமொழி வேதங்களைச் சிவபெருமான் அருளிச் செய்தார் என்று கூறிய திரு நாவுக்கரசர், தென்மொழி வேதத்தையும் ஆலின்கீழிலிருந்து அருளிச்செய்தார் என்று கூறுகிறார்.

ஆலின் கீழ் அறம் அருளியது : சிவபெருமான் ஆலின் கீழிருந்து அறம் உரைத்த செய்தியைத் திருநாவுக்கரசர் இவ்வாறு கூறுகிறார்: ஆலின் நிழற்கீழ் அறமோதிய குழகன்.மடற்பெரிய ஆலின்கீழ் அறம் நால்வர்க்கன்றுரைத்தான். விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்.

66

“ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க் கருளிச் செய்து நூலின்கீ ழவர்கட் கெல்லாம் நுண்பொருளாகி நின்று.

“வருந்தின நெருக லின்றாய் வழங்கின நாளர் ஆற்கீழ் இருந்தின பொருள்கள் நால்வர்க் கியம்பினர்

99

99

பணைத்தெழுந்த ஆல்நிழற் கீழிருந்து ஆரணமோதி. ஆலின்கீழறத்தா ரன்னியூராரே. ஆலின்கீழ் அறம் பகர்ந்தார்.

66

66

ஆலத்தார் நீழலில் லறம் நால்வர்க்குக்

கோலத்தால் உரை செய்தவன்.......

99

"நற்றவஞ் செய்த நால்வர்க்கு நல்லறம் உற்றவண் மொழியால் அருள்செய்த நற். கொற்றவன்.

அறங்காட்டி யந்தணர்க்கன் றாலநீழல் அறம் அருளிச் செய்த அரனார். சொல்லருளி யறநால்வர்க் கறியவைத்தார். ஆலின்கீழ் அறநால்வர்க் களித்தான்கண்டாய். ஆலநீழல்அறஞ்சொன்னாய் போற்றி. அன்றாலின் கீழிருந்துஅறஞ் சொன்னானை. ஆலதனில் அறநால்வர்க் கருள்செய்தானை. அன்றலின்கீழ்த் திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை.

இவ்வாறு ஆரிய வேதத்தையும் திராவிட வேதத்தையும் சிவ பெருமான் அருளிச்செய்தார் என்று தனித்தனியே கூறிய நாவுக்கரசர்,