உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

சேரசோழருந் தென்னரும் வடவுலத்

தரசருந் திரைதந்த

வீரமாமத கரியிவை பரியிவை

யிரவலர் கவர்வாரே.

381

27

ஷ வேறு

கவரிச் செந்நெற் காடணி சோலைக்

காவிரி வளநாடன்

குமரிக் கொண்கண் கங்கை மணாளன்

குரைகழல் விறல்நந்தி

அமரில் தெள்ளாற் றஞ்சிய நெஞ்சத்

நரசர்கள் திரள்போகும்

இவரிக் கானத்தேகிய வாறென்

எழிநகை யிவனோடே.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ வூசல்

உத்தரியப் பட்டாட வாடாமோ வூசல் ஆடகப்பூண் மின்னாட வாடாமோ வூசல்

அம்மென் மலர்க் குழல்சரிய ஆடாமோ வூசல் கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்

காடவற்கு முன்றோன்றல் கைவேலைப் பாடிக்

காஞ்சீபுரம்பாடி யாடாமோ வூசல்.

கலி விருத்தம்

ஊசல் மறந்தாலும் ஒண்கழல் அம்மானை வீசல் மறந்தாலும் மெல்லிய லென்பேதை பூசல் இலங்கிலைவேல் பொற்கழல் நந்திநின் பாசிலை யந்தொண்டை யல்லது பாடாளே.

28

29

30