உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

சிந்துவித்த செங்கோல் நந்தி

மனக்கினியா னவனிட்ட வழக்கன்றோ

வழக்கிந்த வையத் தார்க்கே.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தார்வட் டக்கிளி மருவுஞ் சொற்பகர்

தளரிடை தையல் வஞ்சிக்கின்று

ஏர்வட் டத்தனி மதிவெள் ளிக்குடை

கொடிதென் றாலது பழுதன்றோ

போர்வட் டச்சிலை யுடையவாள் பற்றிய பொருகடன் மல்லைப் புரவலனே பார்வட் டத்தனி மதயா னைப்படை

யுடையாய் பல்லவ ரடலேறே.

53

54

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடலேறு வலத்துயர் வைத்தபிரான்

அடலுக்ரம கோபன் அடங்கலர்தா மடலேறிட வாகை புனைந்தபிரான் வடவேங்கட நாடுடை மன்னர்பிரான் பெடையேறு நெடுங்கழி சூழ்மயிலைப் பெருமானது பேரருள் நீண்முடிமேல்

மிடலேறிய கோதை நினைந்தயர்வாள்

மெலியத்தழல் வீசுமி மாமதியே

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மலர்ச்சூழ லமர்ந்தினிய வண்டார்க்குங் காலம் வரிக்குயில்கள் மாவிலிளந் தளிர்கோதுங் காலம் சிலர்க்கெல்லாஞ் செழுந்தென்ற லமுதளிக்குங் காலம் தீவினையேற் கத்தென்றல் தீவிசுங் காலம்

55

பலர்க்கெல்லாம் கோனந்தி பன்மாடக் கச்சிப் பனிக்கண்ணார் பருமுத்தம் பார்த்தாடுங் காலம்

மலர்க்கெல்லா மைங்கணைவே ளலர்தூற்றுங் கால மகன்றுபோ னவர்நம்மை யயர்த்துவிட்ட காலம்.

56