உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உண்டிரையிற் செங்கழுநீ ரிலஞ்சி மாடே

ஒண்பொழிலிற் சண்பகத்தார் தடவி யோடித்

தண்டலையிற் பூங்கமுகம் பாளை தாவித்

தமிழ்த்தென்றல் புகுந்துலவுந் தண்சோணாடா விண்டொடுதிண் கிரியளவும் வீரஞ் செல்லும் விடேல்விடுகு நீகடவும் வீதி தோறுந்

திண்டறுகண் மாத்தொழுத பாவை மார்க்குச் செங்கோல னல்லையோ நீசெப் பட்டே

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பட்ட வேந்தர் தம் பூணொடும்

பாவைமார் நாணெடுந் தெள்ளாற்றில்

வட்ட வெஞ்சிலை நாணிடக்

கழித்தவன் மல்லையின் மயிலன்னாள்

விட்ட கூந்தலும் விழியுநன்

முறுவலு நுதன்மிசை யிடுகோல

மிட்ட பொட்டினொ டிளமுலைப்

போகமு மெழுதவு மாகாதே.

ஷ வேறு

1ஆகாது போக மயில்விளைத் தகன்ற லவன்கை போகாத சங்கு மருளாள ரென்ற போதுவண்டோ

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல்

நான்கிழவ னசைந்தே னென்றோ வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா

1. இச்செய்யுள், பிற்பாதி மறைந்து விட்டது.

393

74

75

76