உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில்

நந்திபதஞ் சேரார் ஆனைக்

கொம்பன்றோ நங்குடிலில் குறுங்காலும்

நெடுவளையுங் குனிந்து பாரே.

ஷ வேறு

பாவையர் பரிந்து தாங்கும் பனிமலர் செறிந்த செந்திற் கோவையேய் நந்தி காக்குங் குளிர்பொழிற் கச்சி யன்னாள் பூவையும் பந்துந்தந்து புல்லினா ளென்னை யென்னே மாலியல் கானம் போந்த தறிகிலேன் மதியி லேனே.'

அறுசீரடி ஆசிரிய விருத்தம்

2நீண்டதாங்க கங்குல் எங்கும்

நிறைந்ததாம் வாடை பொங்கி

மூண்டதாம் மதியி னோடே

77

78

முயங்குதார் வழங்கு தெள்ளாற்று

ஈண்டினார் பரியுந் தேரும்

இருகைவென் றொருகை வேழந்

தூண்டினான் நந்தி யிந்தத்

79

தொண்டைநா டுடைய கோவே.

வெண்டுறை

கோலக்கொடி யன்னவர் நீள்செறுவிற்

குறுதேன்வழி கொண்ட லருங்குவளை

காலைப்பொழு தின்னெழு கன்னியர்தங் கண்ணின் படிகாட்டிடு கச்சியின்வாய்

மாலத்தெள் ளாறெறிந்த மானோ

தயன்குடைக்கீழ்

ஞாலத்தோ டொத்ததே நான்பெற்ற

நறுங்கொம்பே.

80

1.

இங்கு அந்தாதித்தொடை இல்லை. சிலசெய்யுள்கள் மறைந்திருக்க வேண்டும்.

2.

இப்பாட்டிற்கு அந்தாதித் தொடை இல்லை. ஆகவே இப்பாட்டிற்கு முன் இருந்த செய்யுள் (அ) செய்யுட்கள் மறைந்து விட்டன போலும்.