உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

தாமரைப் பூவில் நண்டு படுத்து உறங்க, அந்தப் பூவில் மொய்க்கும் வண்டுகள் பாடுவது, இசை பாடித் தூங்கவைப்பது போல இருந்தது.

"பொள்ளலங் கழனிப் புதுவிரை மலரில்

பொறிவண்டு இசைபாட

அந்நலங் கமலத் தவிசின் மேலுறங்கும்

அலவன்வந் துலவிட அண்ணல்

செந்நெலங் கழனிசூழ் திருமுல்லை வாயில்”

புன்னை மரத்தில் மலர்கள் அரும்பிப் பூத்து மலர்ந்து கொத்துக் கொத்தாய் இருக்கின்றன. அரும்புகள் முத்துப் போல் திரண்டு வெண்மையாக இருக்கின்றன. பூத்த மலருக்குள் மகரந்தம், பொன் பூத்ததுபோலக் காட்சியளிக்கிறது. பழைய பூக்களின் நடுவில் உள்ள கரு, பவளம் போலச் சிவந்து காணப்படுகிறது. புன்னை மலரை ஊன்றிப் பார்த்தவருக்கு இந்த இயற்கையும் உவமையும் நன்கு புலப்படும். இதனைச் சுந்தரர் கூறுகிறார்.

66

“கரும்புன்னை வெண்முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின்காட்டும் கடிபொழில் சூழ் கலைய நல்லூர்காணே'

காவி, குவளை, தாமரை, கழுநீர் முதலிய பூத்துள்ள குளத்தில் அன்னப்பறவைகள் விளையாடும் இயற்கைக் காட்சியைக் காட்டுகிறார்

66

'காவியும் குவளையும் கமலம் செங்கழு நீரும்

மேவிய குருகாவூர்

“ஒப்புடை ஒளிநீலம் ஓங்கியமலர்ப் பொய்கை அப்படி அழகாய அணிநடை மடஅன்னம் மெய்ப்படு குருகாவூர்"

திருக்குறளும் நாலடியாரும்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில், திருக்குறள் கருத்துக்களையும் நாலடியார் கருத்துக்களையும், இடையிடையே கூறுகிறார். திருநெல்வாயில் திருவரத்துறை தேவாரத்தில் இதனை நன்கு காணலாம். அவற்றைக் காண்போம்.