உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

உன்னை நான் மறந்தேன் இல்லை என்று கூறி மகிழ்ந்தான் அது கேட்டுத் தேசிகப்பாவை விம்மித மடைந்து பேருவகை கொண்டாள்.

தேசிகப்பாவை அரண்மனையில் தங்கினாள். அரண்மனை நாடக அரங்கில்அவள் நாள்தோறும் இசைபாடியும் நடனம் ஆடியும் அரசனை மகிழ்வித்தாள். சீவக்குமாரனுடைய அரண்மனையில் தேசிகப்பாவையின் ஆடல்பாடல்கள் நெடுங்காலம் நடந்தன.

நரம்புமீது இறத்தல் செல்லா நல்லிசை முழவும் யாழும் இரங்குதீங் குழலும் ஏங்கக் கிண்கிணி சிலம்பொ டார்ப்பப் பரந்தவாள் நெடுங்கண் செவ்வாய்த் தேசிகப்பாவை கோல அரங்கின் மேல் ஆடல் காட்டி அரசனை மகிழ்வித் தானே4

அடிக்குறிப்புகள்

1. சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம் 89, 90, 91.

2. சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம் 92.

3. சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம் 95.

4.

சீவகசிந்தாமணி, இலக்கணையார் இலம்பகம். 219.