உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தமிழ் நூல்களில் மீன் வகை*

தமிழ்நாடு கடலினை எல்லையாகக் கொண்டது. சேரநாடு, கேரளநாடு ஆவதற்கு முன்னே, அஃதாவது ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே, மேல்கடலாகிய அரபிக்கடலும் தமிழ் நாட்டின் மேற்கு எல்லையாக அமைந்திருந்தது. ஆகவே கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் பரந்த கடல்களை எல்லையாகக்கொண்ட தமிழ் நாட்டவருக்கு மீன்களைப்பற்றிய ஆராய்ச்சி இருந்திருக்க வேண்டி யது இயற்கையே. கடல் அன்றியும், ஏரிகள், ஆறுகள், குளங்கள் முதலிய நீர்நிலைகளிலும் மீன் இனங்கள் வாழ்கின்றன. இயற்கைக் காட்சிகளில் இயல்பாகவே கருத்தைச் செலுத்தும் வழக்க முள்ள தமிழ்ப் புலவர்கள், மீன்களைப் பற்றியும் தமது நூல்களில் கூறி யிருப்பார்களன்றோ! அவர்கள் தமது இலக்கிய நூல்களிலே மீன் வகை களைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள் என்பதை ஈண்டு ஆராய்வோம்.

மீன்வகைகளையும் அவற்றின் பெயர்களையும் மீன் பிடிக்கும் வலைஞர்களாகிய மீன் வாணிகர்தாம் அறிந்திருப்பாரெனக் கருதவேண்டா. தமிழ்ப்புலவர்களும் அவற்றை அறிந்திருந்தனர். நாட்டின் நீர்வளத்தைக் கூறும்போதெல்லாம் ஏதேனும் மீன் இனங் களைக் குறிப்பிடுவது புலவர்மரபு. அன்றியும் மாதரின் கண்களுக்கு உவமை கூறும்போதெல்லாம் சேல், கயல் என்னும் இருவகை மீன்களைக் குறிப்பிடுகிறார்கள். இறைவியின் திரு நாமங்களில் ஒன்று அங்கயற்கண் அம்மை, (மீனாக்ஷி) என்பது. பழைய சங்க நூல்களிலும் பிற்காலத்துத் தேவாரம், நாலாயிரப் பிரபந்தம் முதலிய நூல்களிலும் இறால், சுறா, கயல்,சேல், குரவை, மடவை முதலிய மீன்களின் பெயர்களைக் காண்கிறோம். “பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பு, எனவரும் மதுரைக் காஞ்சியடியினாலே, பனைமீன் என்னும் ஒருவகை மீன் பெயரை அறிகிறோம்.

66

و,

99

“கல்லுத் தலையின்கண் யாதொரு மீனுக்குண்டு, அம்மீன் கற்றலை எனவும் சொல்லுவது, இரண்டு மொழியைத் தொகுத்தலால் இரு மொழித்தொகை என்பது வீரசோழிய உரை. (சொல்லதிகாரம்) * செந்தமிழ்ச் செல்வி, 23. 8, (1949)