உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

கம்பர்:

கல்வியிற் பெரியாராகிய கம்பர் தம்முடைய இராமாயணத்தில் அவையடக்கங் கூறியுள்ளார். அச்செய்யுட்களாவன:

66

ஓசைபெற் றுயர் பாற்கடல் உற்றுஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசைபற்றி அறையுலுற்றேன் மற்றவ் ஏசில் கொற்றத்து இராமன்கதையரோ'

(பூசை - பூனை)

66

66

99

'வையம் என்னை இகழவும் மாசுஎனக்கு எய்தவும் இயம்புவது யாதெனில் பொய்யில் கேள்விப் புலமையோர் புகல் தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே

'முத்தமிழ்த் துறையின் முறைபோகிய

99

உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவன் பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ சேக்கிழார்:

பெரியபுராணம் பாடிய சேக்கிழார் சுவாமிகள் கூறுகிற அவையடக்கம் இவை:

66

"தெரிவரும் பெருமைத் திருத்தொண்டர்தம்

பொருவருஞ்சீர் புகலலுற்றேன் முற்றப்

பெருகுதண்கடல் ஊற்றுள் பெருநசை

ஒருசுணங்கனை ஒக்குந் தகைமையயேன்

திருத்தக்கதேவர்:

சீவக சிந்தாமணி இயற்றிய திருத்தக்கதேவர் கூறுகிற அவையடக்கம் இவை: