உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

'முந்நீர்ப் பிறந்த பவழத்தோடு சங்கும் முததும்

அந்நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்? இந்நீர என்கொல் பழுதாயினும் கொள்பவன்றே பொய்ந்நீர அல்லாப் பொருளால் விண்புகுதும் என்பார்’

கற்பா லுமிழ்ந்த மணியுங்கழு வாது விட்டால்

நற்பா லழியும் நகைவெண்மணி போல்நி றைந்த சொற்பா லுமிழ்ந்த மறுவும்மதி யிற்க ழூஉவிப் பொற்பா இழைத்துக் கொளற்பாலர் புலமைமிக்கார். தோலாமொழித்தேவர்

441

காவியம் இயற்றிய தோலாமொழித்தேவர் கூறம்

சூளாமணி காவியம் அவையடக்கம்:

செங்கண் நெடியான் திறம்பேசிய சிந்தை செய்த

நங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கள் முன்னர் அங்கண் விசும்பின் இருள்போழ்ந்த கல்வா னெழுந்த

திங்கள் மறுவும் சிலர்கைதொழச் செல்லு மன்றே

பெரும்பற்றப் புலியூர் நம்பி

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்தைப் பாடியவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி. இவர் இந்நூலிலே அவை யடக்கங் கூறுகிறார். பெரும் புலவர் சபையிலே நான் கவிபாடுவது சூரியன் முன் மின்மினிப்பூச்சி ஒளிவிடுவது போன்றிருக்கிறது என்று கூறுகிறார்.

அளந்தபேர் அறிவி னோங்கும் ஆசிலா சிரியர் முன்னம் தளர்ந்தசிற் றறிவேன் நின்று தமிழ்கவி சாற்றுமாறு வளர்ந்ததீம் புவனம் முற்றும் வந்தபேர் இருளை ஒட்டி

விளங்கிய பரிதி முன்னர் மின்மினி விளங்கல் போலும்.

உயரமான மலையின் உச்சியில் உள்ள மலைத்தேனை உண்பதற்குக் காலில்லாத முடவன் விரும்பியது போன்ற இருக்கிறது நான் இப்புராணத்தைக்கூற முற்பட்டது என்று கூறுகிறார்.