உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

அவைநடு வோங்கும் தெய்வ அகத்தியன் முன்னஞ் சொன்ன கவிபொதி கதையை யானும் தமிழ்செய்வேன் என்கை காணில் புவிமிசை விசும்பில் நீடும் பொருப்பிடை முடவன் ஏறிச்

சுவைதரு தேனை யுண்ண எண்ணுவான் துணிதல் போலும். நீர்வேட்கை கொண்ட நாய் பெரிய கடல் நீரை நக்கிக்குடிக்க ஆசைப் பட்டது போன்றது நான் இந்தப்புராணம் பாட முற்பட்ட என்று கூறுகிறார்.

ஏய பத்தி முனிவன் இயம்பிய

சேய சொக்கன் திருவிளை யாடலைக் காய்ப சிக்குக் கடலைக் குடிக்குமோர்

நாயை யொக்கும் தமியேன் நவிலுதல்:

குழந்தையின் மழலைச் சொற்களைத் தாய் தந்தையர் விரும்பிக் கேட்பதுபோல பேதையாகிய என்னுடைய சொல்லையும் அறிஞர்கள் விரும்பிக்கேட்பார்கள் என்று கூறுகிறார்.

ஓதுபாலர் மழலை யுரையையும் தாதை தாயர் தயாவுறக் கேட்டெனப் பேதைஎன்புன் மொழிபெரு மான் புகழ் ஆதலால்நல் லறிஞர் வியப்பரே!

பரஞ்சோதி முனிவர்:

புலியூர் நம்பிக்குப்பிறகு திருவிளையாடற்புராணம் பாடியவர் பரஞ்சோதி முனிவர். இவர் இவ்வாறு அவையடக்கங் கூறுகிறார்: இறையனார் பாடிய செய்யுளில் கடைச் சங்கப் புலவர் குற்றங்கண்டார் என்றால் வெள்ளறிவுடைய என் பாடலிலும் குற்றங்களை எளிதில் காண்பார்கள் புலவர்கள். பாலில் உள்ள நீரைப் பிரித்துப் பாலை மட்டும் உண்கிற அன்னப்பறவையைப் போல, இந்நூலிலுள்ள குற்றங்களை நீக்கிக் குணங்களைக் கொள்க என்று கூறுகிறார்.

நாயகன் கவிக்குங் குற்றம் நாட்டிய கழக மாந்தர்

மேயவத் தலத்தி னோர்க்கென் வெள்ளறி வுரையில் குற்றம் ஆயுமா றறிரதன் றேனும் நீர்பிரித் தன்னம் உண்ணும்

தூயதீம் பால்போற் கொள்கசுந்தரன் சரிதந் தன்னை!