உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

443

கடல் நீரைப் பருகிய மேகமானது உப்பை நீக்கி நன்னீராகப் பொழிவதுபோல, கற்றறிவுடையரேர் இந்நூலின் குற்றத்தை நீக்கி நன்மையைக் கொள்வாராக என்றுங் கூறுகிறார்.

பாயவாரியுள் துவர்கெடுத்து உலகெலாம் பருகத் தூய வாக்கிய காரெனச் சொற்பொருள் தெளிந்தோர் ஆய கேள்வியர் துகளறுத் தாலவா யுடைய

நாய னார்க்கினி தாக்குப நலமிலேன் புன்சொல் கச்சியப்ப முனிவர்:

கந்தபுராணம் பாடியவர் கச்சியப்ப முனிவர். இவர் தம்முடைய நூலில் அவையடக்கம் கூறுகிறார். கற்றறிந்த புலவர் சபையில் நான் அமர்ந்து இந்நூலைக் கூறுவது. சூரியன் பக்கத்தில் விண்மீன் (நட்சத்திரம்) இருந்து வெளிச்சம்கொடுக்க ஆசைப்படுவது போன்று இருக்கிறது என்று கூறுகிறார்.

ஆன சொற்றமிழ் வல்ல அறிஞர் முன் யானும் இக்கதை கூறுதற் கெண்ணுதல் வான கத்தெழும் வான்கதி ரோன்புடை மீன்இ மைப்ப விரும்பிய போலுமால் சிவப்பிரகாச சுவாமிகள்:

சீகாளத்திப் புராணம் பாடியவர் சிவப்பிரகாச சுவாமிகள். குழந்தைகள் பேசுகிற பொருளற்ற மழலைச் சொல்லைப் பெரியவர்கள் பழிக்க மாட்டார்கள். அதுபோலவே, நுண்ணறிவு இல்லாத என்னுடைய போலிச் செய்யுளையும் அறிஞர்கள் இகழமாட்டார்கள். ஏற்றுக் கொள்வார்கள் என்று அவையடக்கங் கூறுகிறார்.

நூற்றுறை பயின்று பெற்ற நுண்ணுணர் வுடையன் அல்லேன் சாற்றும் இப்போலிச் செய்யுள் சான்றவர் இகழ்தல் செய்யார் மேற்படும் உணர்வின் மூத்தோர் மென்னடைச் சிறுவர் செவ்வாய்ப் பால்கடி கமழும் புன்சொல் பழிப்பனர் உலகில் உண்டோ,