உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

66

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

"துன்பம் தோற்றம், பற்றே காரணம்

இன்பம் வீடே, பற்றிலி காரணம்'

-

(மணி 30: 186-187)

என்னும் உண்மையை உறுதியாக உணர்தல் துக்க நிவாரணம் என்பது. நோய் நீக்கும் வழி:

4.

துன்பத்தைப் போக்கி வீடு பேறாகிய நிர்வாண மோட்சத்தை யடைவதற்குரிய வழியாது எனில், அஷ்டாங்க மார்க்கம் என்னும் எட்டு வித ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுவதாகும் அஷ்டாங்க மார்க்க மாவன: 1. நற்காட்சி (ஸம்யக் திருஷ்டி) (2) நல்லூற்றம், அஃதாவது நற் கருத்து (ஸம்யக் சங்கல்பம்) 3. நல்வாய்மை (ஸம்யக் வாக்கு) 4. நற் செய்கை (ஸம்யக் கர்மம்) 5. நல்வாழ்க்கை (ஸம்யக் ஆஜீவம்) 6. நல் லூக்கம்; அஃதாவது நன்முயற்சி (ஸம்யக் வியாயாமம்) 7. நற்கடைப்பிடி (ஸம்யக் ஸ்மிருதி) 8. நல்லமைதி (ஸம்யக் சமாதி) இவற்றின் விளக்கத்தை விரிந்த நூலிற் காண்க.

இந்த அஷ்டாங்க மார்க்கத்தில் சீலம் (ஒழுக்கம்), சமாதி (தியானம்), பஞ்ஞா (ஞானம்) என்னும் மூன்றும் அடங்கும். இவற்றைச் சிறிது விளக்குவோம்.

சீலம்; இது பஞ்ச சீலம், அஷ்டாங்க சீலம், தசசீலம் என மூன்று வகைப்படும். பஞ்ச சீலமாவது: 1. ஓருயிரையும் கொல்லாமலும் தீங்கு செய்யாமலும் இருத்தலோடு அவற்றினிடம் அன்பாக இருத்தல், 2. பிறர் பொருளை இச்சிக்காமலும் களவு செய்யாமலும் இருத்தல், 3. கற்புநெறியில் சிற்றின்பம் துய்த்தல்; அஃதாவது, முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல் 4. உண்மை பேசுதல், பொய் பேசாதிருத்தல், 5. மயக்கத்தையும் சோம்பலையும் உண்டாக்குகிற மதுபானங்களை உட்கொள்ளாமை. இந்தப் பஞ்ச சீலங்கள் இல்லறத்தார்க்கு உரியன. இவற்றோடு, 6. இரவில் தூய்மையான உணவை மிதமாக உண்ணல், 7. பூ, சந்தனம், வாசனைச் சுண்ணம், எண்ணெய் முதலிய நறுமணங்களை நுகராமை, 8. பஞ்சணை முதலியவற்றை நீக்கித் தரையில் பாய்மேல் படுத்து உறங்குதல் என்னும் மூன்றையும் சேர்த்து அஷ்டசீலம் (எட்டு ஒழுக்கம்) என்பர். அஷ்டசீலம் இல்லறத்தாரில் சற்று உயர்நிலை யடைந்தவர் ஒழுகவேண்டிய ஒழுக்கங்களாகும். இவற்றோடு, 9. இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலிய காட்சிகளைக் காணாதிருத்தல்,