உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

மணிமேகலை வரலாற்றிலுல் பௌத்த மதக் கொள்கைப்படி வானத்தில் பறந்து செல்லுதல் ‘அமுத சுரபி' என்னும் சிறு பாத்திரத் தினின்றும் நினைத்தபோதெல்லாம் வேண்டிய அளவு உணவை உண்டாக்கிக் கொடுத்தல், பதுமைகள் பேசுதல், உருவம் மாறுதல் முதலிய சித்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றை உண்மை என்று கொள்ளாமல் சமயக் கொள்கை என்று ஒதுக்கி விடுவர் பகுத்தறிவாளர்.

‘மணிமேகலை' என்னும் பெயருள்ள பௌத்த தெய்வம் ஒன்று உண்டு. அதன் வரலாற்றினை இந்நூல் இணைப்பில் காண்க.

4. சீத்தலைச் சாத்தனார்

இவர் பௌத்தர் என்பதை இவரது பெயரே விளக்குகின்றது. புத்தருக்குரிய பெயர்களுள் சாஸ்தா என்பதும் ஒன்று. இச்சொல் திரிந்து தமிழில் 'சாத்தன்' என்று வழங்குகின்றது. 'சீத்தலை' என்னும் அடைமொழி கொண்டு சீழ் வழிந்தோடும் புண்ணுடைய தலையர் இவர் என்றும், பிறர் பாடும் பாட்டுக்களிற் குற்றங்கண்டால் அக்குற்றத்தைப் பொறாமல், எழுத்தாணியால் தமது தலையைக் குத்திக்கொள்ள, அதனால் எப்போதும் இவர் தலையில் புண் இருந்து சீழ்ப் பிடித்திருந்தது என்றும் பொருந்தாக் கதைகளைக் கூறுவர். சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவ ராகையால் இவருக்குச் ‘சீத்தலை' என்னும் அடைமொழி கொடுக்கப் பட்டதென்று கூறுவார் கூற்றுப் பொருத்தமாகத் தோன்று கிறது. மதுரை மாநகரில் இவர் கூலவாணிகஞ் செய்திருந்தமைபற்றி இவரை மதுரைக் கூலவாணிகர் சாத்தனார் என்றும் கூறுவர்.

சீத்தலைச் சாத்தனார் என்று இவர் வழங்கப்படுதல் பற்றி, சீத்தலை என்னும் ஊரில் கிராமதேவதையாகக் கோயில் கொண் டிருந்த ஐயனாரின் பெயராகிய ‘சாத்தன்' என்னும் பெயரே இவருக்குப் பெயராக அமைந்தது என்று வேறு சிலர் கூறுவர். இது பொருத்தமாகத் தோன்றவில்லை. ('சாத்தனார்' என்னும் இந்நூல் இணைப்புக் காண்க.)

‘சாத்தன்” என்னும் பெயர் தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் பெரும் பான்மையோருக்கு வழங்கிவந்தது. சங்ககாலப் புலவர்களில் மட்டும் இருபது பேருக்கு மேற்பட்டவர் சாத்தன் என்னும் பெயரைக் கொண்டவர்கள். ஆகவே, இவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு அடைமொழியுடன் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. நம் சாத்தனாருக்கும்