உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் இருந்த ஈனயான பிக்ஷுக்கள் உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்கவில்லை என்று இவர் அரசனிடம் குற்றம் சாற்றினார். அரசன் இவர் சொல்லைத் தவறாதவன் ஆகையால், மகாவிகாரையில் வாழும் பிக்ஷுக்களுக்கு நகர மக்கள் உணவு கொடுக்கக்கூடா தென்றும், மீறிக் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டளையிட்டான். இதன் காரணமாக மகாவிகாரையிலிருந்த ஈனயான பிக்ஷுக்கள் உண்ண உணவு கிடைக்கப்பெறாமல் நகரத்தைவிட்டு இலங்கையின் தென்பகுதிக்குப் போய்விட்டார்கள். போய்விடவே 'மகாவிகாரைப் பள்ளி உரியவரின்றிக் கிடக்கிறபடியால், அஃது அரசனுக்குரிய பொருளாய் விட்டது,' என்று சங்கமித்திரர் அரசனுக்குத் தெரிவிக்க, அரசன் அதனை இவரிடத்திலே ஒப்படைத்தான். சங்கமித்திரர் அந்த விகாரையை இடித்து, அப்பொருள் களைக் கொண்டு தமது கொள்கையைச் சேர்ந்த பிக்ஷுக்கள் வாழும் அபயகிரி விகாரையைப் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இச் செய்கைக்குச் சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றை யெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி அவனால் அதிகமாகக் காதலிக்கப்பட்டவள். இலங்கைத் தீவின் பழைய மதமாகிய ஈனயான பௌத்த மதத்தைப் பின்பற்றி நடப்பவளாதலின், அபயகிரி விகாரையிலிருந்த பிக்ஷுக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரை யையும் இடித்தொழித்த சங்கமித்திரரையும் அவருக்குத் துணையா யிருந்த மந்திரி சோணனையும் கொன்றுவிடும்படிச் சிலரை ஏவினாள். அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலை செய்து விட்டார்கள். இந்தச் செய்திகள் மகாவம்சம் 36, 37ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன

சங்கமித்திரர் வைதுல்ய மதத்தை நன்கு கற்று, அதன் வழி ஒழுகியதோடு, அந்த மதத்தைச் சிங்களத்தீவிலும் பரவச் செய்ய முயன்றார். பௌத்த மதக்கொள்கைகளை நன்கு அறிந்தவர். இவரது வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை. இவர் ஏதேனும் நூல் இயற்றி யிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர் வாழ்ந்திருந்தவர்.

சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இலங்கை வேந்தன் ஒருவனைச் சைவசமயத்தில் புகச் செய்தார் என்னும் வரலாறும், சங்கமித்திரர் இலங்கை மன்னனை வைதுல்ய மதத்தில் புகச்செய்த