உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

121

என்னும் நூலை இவர் இயற்றினார். ரூபாரூப விபாகம் என்னும் நூலையும் இயற்றியிருக்கிறார். ஜினாலங்காரம் என்னும் நூலையும் இவர் இயற்றியதாகக் கூறுவர். இவர் இயற்றிய வினய வினிச்சயம் என்னும் நூலுக்கு, இலங்கையை அரசாண்ட இரண்டாம் பராக்கிரமபாகு (கி.பி. 1247-1282) என்னும் அரசன், சிங்கள மொழியில் ஓர் உரை எழுதினார். இப்போது அவ்வுரை நூல் கிடைக்கவில்லை.

ஆசாரிய புத்ததத்த மகாதேரர் பாலிமொழியை நன்கு கற்றவர். பாலிமொழியில் உள்ள பெளத்தருடைய வேதமாகிய திரிபிடகம் முதலிய நூல்களைத் துறைபோக ஓதியுணர்ந்தவர். பாலிமொழியிலே இனிய கவிகளை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது நூலுக்குப் பிற்காலத்தில் உரை எழுதிய ஒருவர் இவரைப்பற்றிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. “மாதிஸாபி கவி ஹொந்தி, புத்ததத்தே திலங்கதே. புத்ததத்தர் காலஞ்சென்று விட்டபடியால், நாமுங்கூடக் கவிவாணர் என்று கூறிக்கொள்ளலாம் என்பது இதன் பொருள்.

இவர் தாம் இயற்றிய நூல்களில், தாம் பிறந்த சோழ நாட்டையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் பூதமங்கலத்தையும் இனிமையான கவிகளால் புகழ்ந்து பாடியிருக்கிறார்.

திரிபிடகத்தின் பல பகுதிகளுக்கு உரை எழுதிய புத்தகோஷ மகாசாரியரும், புத்ததத்த தேரரும் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்றும், ஒருவரையொருவர் கண்டு உரையாடினார்கள் என்றும், புத்த கோஷரைவிட புத்ததத்தர் வயதில் மூத்தவர் என்றும் நூல்கள் கூறுகின்றன.

(புத்ததத்தரைப் பற்றிச் சில செய்திகளை, சான்றுகள் ஆதாரங் கள் இல்லாமலே தமது மனம் போனவாறு ஒருவர் எழுதியிருக்கிறார். 2 இவர் கூறும் சில செய்திகளாவன: புத்ததத்தர் அச்சுதவிக் கந்த அரசனுக்கு மந்திரியாக இருந்தாராம். இளந்தத்தர் என்று புத்த தத்தருக்குத் தமிழ் நாட்டுப் பெளத்தர் வேறுபெயர் இட்டு வழங்கினார் களாம். உரகபுரம். அஃதாவது இப்போதுள்ள உறையூர், காவிரிக் கரையில் ஒரு துறைமுகப் பட்டினமாக இருந்த தாம். வெங்கிநாட்டு அரசர்களாலும் மிலா நாட்டுச் சிற்றரசராலும் புத்ததத்தர் ஆதரிக்கப்பட்டாராம். இவ்வாறு எல்லாம் இவர், ஆதாரம் காட்டாமல், காரணம் கூறாமல், ஆராய்ச்சித் துறையைச் சிறிதும் பின்பற்றாமல் மனம் போன போக்காக எழுதி வெளுத்துக் கட்டியிருக்கிறார். புற நானூற்றில் கூறப்படுகிற இளந்தத்தன்