உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

"

என்னும் தமிழ்ப் புலவரை மனத்தில் எண்ணிக் கொண்டு, அதை வெளிப்படையாகக் கூறாமல், அவ்விளந்தத்தரையும் நம் புத்த தத்தரையும் முடிச்சுப் போடுகிறார். இவ்வுரைகளை அறிவுடையோர் ஏற்கமாட்டார்.)

இவர் வாழ்ந்திருந்த காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற் பகுதியாகும். எப்படி என்றால், புத்தகோஷர் வினய பிடகத்துக்குத் தாம் எழுதிய ஸமந்தபாஸர்திகா என்னும் உரையில், இலங்கையரசன் ஸ்ரீநிவாசனுடைய 20ஆம் ஆட்சி ஆண்டில் அவ்வுரையைத் தொடங்கி 21ஆம் ஆண்டில் முடித்ததாகக் கூறுகிறார். மகாவம்சம் என்னும் நூலில், புத்தகோஷர், இலங்கையை யாண்ட மகாநாமன் என்னும் அரசன் காலத்தில் இலங்கைக்கு வந்து உரை எழுதினார் என்று கூறப்பட்டுள்ளது. புத்தகோஷர், தாம் எழுதிய தம்மபதாட்டகதா என்னும் உரையில், சிறீகுட்ட என்னும் இலங்கை மன்னன் கட்டிய ஒரு விகாரையில் தங்கியிருந்து அவ்வுரையை எழுதியதாகக் கூறுகிறார். ஸ்ரீநிவாசன், மகாநாமன், சிறீகுட்டன் என்னும் பெயர்கள் ஒரே அரசனைக் குறிக்கின்றன. இந்த அசரன், இலங்கையை, கி.பி. 409 முதல் 430 வரையில் அரசாண்டான். எனவே, இவன் காலத்தில் இருந்த புத்த கோஷரும், புத்தகோஷருக்குச் சற்று வயதில் மூத்தவரான புத்த தத்தரும் இதே காலத்தில் இருந்தவர் ஆவர்.

மேலும், பேர்பெற்ற புத்தகோஷர் என்னும் பௌத்த ஆசிரியரும் இவரும் தற்செயலாக ஒருவரை ஒருவர் கண்டு உரையாடியதாகக் கூறப்படுவதாலும், புத்தகோஷர் முதலாவது குமார குப்தன் என்னும் அரசன் காலத்தில் வாழ்ந்திருந்தவராகையாலும், சோழநாட்டை ஆண்ட அச்சுத நாராயணன், அல்லது அச்சுத விக்கந்தன் என்னும் களபர (களம்ப) அரசனும் ஷ குமார குப்தனும் ஒரே காலத்தவராகையாலும், புத்ததத்த தேரரை அச்சுத விக்கந்தன் ஆதரித்தவனாகையாலும், இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் ஆவர்.

8. கணதாசர்

கணதாசர் என்பது, கண்ண (கிருஷ்ண) தாசர் என்பதன் திரிபு. சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில், இவர் ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருந்தார் என்றும், அவ்விகாரையில் தங்கியிருந்தபோது, ஆசாரிய புத்ததத்த மகாதேரர் அபிதம்மா வதாரம், மதுராத்த விலாசினீ