உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

ஞானமுள்ளவரான

123

(புத்த வம்சம் என்னும் நூலின் உரை) என்னும் நூல்களை இயற்றிய தாகவும் ஆசாரிய புத்ததத்தர் கூறுகிறார். இந்தக் கணதாசர் வைணவராக இருக்கவேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். இவரைப்பற்றி வேறு செய்தி ஒன்றும் தெரியவில்லை. பௌத்த பிக்ஷுக்கள் தங்குவதற்கு விகாரையைக் கட்டியபடியால் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் ஆவர். பூஜாவலீ என்னும் சிங்கள நூல், இவரை ஆமாத்தியர் (அமைச்சர்) என்று கூறுகிறது. "மிகவும் புத்த தத்தர் என்னும் பெயரையுடைய அர்த்தகதாசாரியர், வினய வினிச்சயம், புத்தவம் சாட்டகதா, அபிதம்மாவதாரம் என்னும் பௌத்த தர்ம நூல்களைச் சுமதி என்னும் தேரருடையவும், கணதாசர் என்னும் ஆமாத்தி யருடையவும் வேண்டுகோளின்படி எழுதினார்,” என்று அந்நூல் கூறுகிறது. ஆகவே, இவர் சோழ அரசனுடைய மந்திரி என்று தெரிகிறது. களம்ப (களபர) குலத்தைச் சேர்ந்த அச்சுத விக்கந்தன் என்னும் அரசன் சோழ நாட்டை அரசாண்ட காலத்தில் தாம் வினய வினிச்சயம் என்னும் நூலை எழுதி முடித்ததாகப் புத்ததத்தர் கூறுகிறபடியினாலே அவ் வரசனுடைய மந்திரியாக இவர் இருந்தார் என்று கருதலாம்.

9. வேணுதாசர்

இது விஷ்ணுதாசர் என்பதன் மரூஉ. இவர் சோழ நாட்டில் பூதமங்கலம் என்னும் ஊரில், ஒரு பௌத்த விகாரையைக் கட்டி யிருந்ததாகவும், அவ்விகாரையில் தங்கியிருந்தபோது, ஆசாரிய புத்ததத்த மகாதேரர் வினயவினிச்சயம் என்னும் நூலை எழுதிய தாகவும் அவர் அந்நூலில் கூறுகிறார். இவரைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. இந்த வேணுதாசரும், மேலே கூறிய கணதாசரும் ஒருவரே என்று, ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால்

சாரிய புத்ததத்தர் இவ்விருவரும் ஒருவரே என்று யாண்டும் கூறவில்லை. ஆகையால் இருவரும் வேறு வேறு ஆட்கள் என்பது எமது கருத்து.

கணதாசர், வேணுதாசர் என்னும் பெயர்கள் ஒருவரையே குறிக்கின்றன என்றும், இந்த விஷ்ணுதாசர், ஸ்கந்தபுராணம் Chap. (XXVI - XXVII) விஷ்ணுகாண்டம், கார்த்திகமாச மகாத்மியத்தில் கூறப்படுகிற விஷ்ணுதாசரே என்றும் பரூவா என்பவர் கூறுகிறார்.3 விஷ்ணு புராணம் 10ஆம் அதிகாரத்தில் கூறப்படுகிற விஷ்ணு தாசர்தான் இந்த