உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமுஞ் செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும் எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி

வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே

ஒப்பத் தோன்றிய வுவவனந் தன்னைத் தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு

மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலையென்’

மலர்வனம் புக்க காதை, 160-171)

மேற்சொன்ன உவவனத்திற்குச் சென்றது மணிமேகலைக்கு அதுவே முதல் தடவையாதலின், அவளுடன் சென்ற சுதமதி என்பவள், அப்பூஞ்சோலையின் இயற்கை எழிலினை மணி மேகலைக்குக் காட்டி விளக்குகின்றாள். அப்பகுதி இது:-

'பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக் கிருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில் குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட

மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர் மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண்!

மாசறத் தெளிந்த மணிநீ ரிலஞ்சிப் பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின்

றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை அரச வன்ன மாங்கினி திருப்பக்

கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக்

கம்புட் சேவற் கனைகுரன் முழவாக் கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய்! இயங்குதேர் வீதி யெழுதுகள் சேர்ந்து

வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல் விரைமலர்த் தாமரை கரைநின் றோங்கிய கோடுடைத் தாழைக் கொழுமட லவிழ்ந்த வால்வெண் சுண்ண மாடிய திதுகாண்! மாதர் நின்கண் போதெனச் சேர்ந்து தாதுண் வண்டின மீதுகடி செங்கையின்