உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

அஞ்சிறை விரிய வலர்ந்த தாமரைச் செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங் கெறிந்தது பெறாஅ திரையிழந்து வருந்தி மறிந்து நீங்கு மணிச்சிரல் காண்! எனப் பொழிலும் பொய்கையுஞ் சுதமதி காட்ட மணிமே கலையம் மலர்வனம் காண்புழி'

2. வீரசோழியம்

145

(பளிக்கறை புக்க காதை, 1-26)

இஃதோர் இலக்கண நூல். வடமொழி இலக்கணத்தைச் சிறுபான்மை தழுவித் தமிழ் ஐந்திலக்கணங்களையும் சுருக்கமாகக் கூறுவது. இதனை இயற்றியவர் புத்தமித்திரனார். இந்நூற்கு உரை எழுதியவர் இவர் தம் மாணவராகிய பெருந்தேவனார். (நூலாசிரியர், உரையாசிரியர் வரலாறுகளை 11ஆம் அதிகாரத்தில் காண்க.) புத்தமித்திரனாரை ஆதரித்த வீரராசேந்திரன் என்னும் வீரசோழன் பெயரால் இந்நூல் இயற்றப்பட்டதாகலின், இதற்கு இப்பெயர் வாய்ந்தது. இதனை ‘எதிர்நூல்' என்பர்.

இதற்கு ‘வீரசோழியக் காரிகை' என்னும் பெயரும் உண்டு. எழுத்ததிகாரம், சந்திப்படலம் என்னும் ஒரே படலத்தையுடைய தாய் 28 செய்யுள்களையுடையது. சொல்லதிகாரம், வேற்றுமைப் படலம் (9- செய்யுள்), உபகாரப் படலம் (6-செய்யுள்), தொகைப் படலம் (8– செய்யுள்), தத்திதப்படலம் (8-செய்யுள்), தாதுப்படலம் (11-செய்யுள்) கிரியாபதப்படலம் (13+2-செய்யுள்) என்னும் ஆறு படலங்களை யுடையது. ஏனைய பொருள், யாப்பு, அணி என்னும் மூன்று அதிகாரங் களும் முறையே பொருட் படலம் (21-செய்யுள்), யாப்புப்படலம், (36– செய்யுள்) அலங்காரப்படலம் (41-செய்யுள்) என்னும் ஒவ்வொரு படலமுடையன. இவற்றையன்றி மூன்று பாயிரச் செய்யுள்களையு முடையது.

இது வழக்கொழிந்த இலக்கண நூல்களுள் ஒன்று. கச்சியப்ப சுவாமிகள் கந்தபுராணத்தை இயற்றி கச்சிக் குமரகோட்டத்தே அரங்கேற்றுங் காலத்தில், அப்புராணத்தின் முதற் செய்யுளில் வருகிற ‘திகடசக்கரம்’ என்னும் சொற்புணர்ச்சிக்கு இலக்கணங் காட்டும்படி அவையிலுள்ளோர் தடை நிகழ்த்தியபோது, அவர் களுக்கு இந்த வீர சோழியத்திலிருந்து இலக்கணம் காட்டப்பட்ட தென்றும், பின்னர்