உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

21.

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

சோழர் வண்மையும் வனப்புந்

திண்மையும் உலகில் சிறந்துவாழ் கெனவே!

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

பூமகனே முதலாகப் புரந்தோர் எண்திசையும்

தூமலரால் அடிமலரைத் தொழுதிரந்து வினவியநாள் காமமுங் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த் தீமைசால் கட்டுரைக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த நாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச் சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே!

(தாழிசை)

தானமே முதலாகத் தசபாரம் நிறைத்தருளி

ஊனமொன் றில்லாமை ஒழிவின்றி இயற்றினையே! எண்பத்தொன் பதுசித்தி இயல்பினால் உளஎன்று

பண்பொத்த நுண்பொருளைப் பார்அறியப் பகர்ந்தனையே! துப்பியன்ற குணத்தோடு தொழில்களால் வேறுபட

முப்பதன்மேல் இரண்டுகலை முறைமையால் மொழிந்தனையே!

(அராகம்)

ஆதியும் இடையினோ டிறுதியும் அறிகுல

தமரரும் முனிவரும் அரிதுநின் நிலைமையை!

மீதியல் கருடனை விடஅர வொடுபகை

விதிமுறை கெடஅறம் வெளியுற அருளினை!

தீதியல் புலியது பசிகெடு வகைநின

திருஉரு அருளிய திறமலி பெருமையை!

போதியின் நலமலி திருநிழ லதுநனி

பொலிவுற அடியவர் இடர்கெட அருளினை!

(பேரெண்)

திசைமுகன் மருவிய கமலநல் நிறமென வசைஅறு முனிவொடு மலியும் நின்அடி!

உயர்வுறு பெருமையோ டயரறு மயர்வொடு

புரைஅறு நலனொடு பொலியும் நின்புகழ்!