உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

(சிற்றெண்)

கற்புடை மாரனைக் காய்சினந் தவிர்த்தனை! பொற்புடை நாகர்தந் துயரம் போக்கினை! மீனுரு ஆகி மெய்ம்மையிற் படிந்தனை! மானுரு ஆகி வான்குணம் இயற்றினை!

இடையெண்)

எண்ணிறந்த குணத்தோய் நீஇ!

யாவர்க்கும் அரியோய் நீஇ!

உண்ணிறைந்த அருளோய் நீஇ!

உயர்பார நிறைந்தோய் நீஇ! மெய்ப்பொருளை அறிந்தோய் நீஇ! மெய்யறம்இங் களித்தோய் நீஇ! செப்பரிய தவத்தோய் நீஇ! சேர்வார்க்குச் சார்வு நீஇ!

(அளவெண்)

நன்மை நீஇ! தின்மை நீஇ!

நனவும் நீஇ! கனவும் நீஇ!

வன்மை நீஇ! மென்மை நீஇ! மதியும் நீஇ! விதியும் நீஇ! இம்மை நீஇ! மறுமை நீஇ!

இரவும் நீஇ! பகலும் நீஇ! செம்மை நீஇ! கருமை நீஇ!

சேர்வும் நீஇ! சார்வும் நீஇ!

எனவாங்கு,

(தனிச்சொல்)

(சுரிதகம்)

அலகிலா நின்றன் அடிஇணை பரவுதும்,

வெல்படைத் தொண்டைமான் விறற்சேனாபதி சிங்களத் தரையன் வெண்குடை யதனொடு பொங்குபுகழ் வில்லவன்றன் புறக்கொடை கண்டு பொலிதரு சேந்தன் பொன்பற்றி காவலன் மலிதரு பார்மிசை மன்னுவோன் எனவே.

175