உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சாத்தனார் - ஐயனார்

‘சாத்தன்’ அல்லது ‘சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்”, ‘நாமலிங்கானு சாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அஃதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ்நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்' என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற் கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரிகின்றது. பௌத்த நூலாகிய ‘மணிமேகலை'யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் பெயர் 'சாத்தனார்' என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. கோவலன் என்னும் 'சிலப்பதிகார'க் கதைத் தலைவனுடைய தந்தை 'மாசாத்துவன் என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்ட பின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷுவாகத் துறவு பூண்டான் என்பது ஈண்டு நோக்கற்பாலன. மற்றும், 'பெருந்தலைச் சாத்தனார்', 'மோசி சாத்தனார்', 'வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்', 'ஒக்கூர்மா சாத்தனார்', 'கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார்' முதலான சங்ககாலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த 'சாத்தன்' என்னும் பெயரைக் கொண்டு கருதலாம்.

கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோவில்களுக்குச் சாஸ்தாவு குடி' என்றும், 'சாஸ்தா வேஸுவரம்' என்றும், 'சாஸ்தாவுகள என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. என்றும், இவை யாவும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்தமதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப் பட்டன என்றும் கூறப்படுவது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப் பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் 'சாத்தன் காவுகள்' என்று பெயர். (காவு கா தோட்டம் அல்லது பூஞ்சோலை என்பது பொருள்). பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டி