உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

3.

203

இரண்டாவது நூற்றாண்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனைப் பற்றி முற்றும் விளக்கி எழுதினால் இடங்கொள்ளும் என்றஞ்சிச் சுருக்கமாகக் குறிக்கப்பட்டது. இதனை நன்குணர வேண்டுவோர் கீழ்க்கண்ட ஆங்கில நூல்களினால் ஐயமறத் தெளியலாம்."1

மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது ஈனயான பௌத்த மதம்; மகாயான பௌத்த மதத்தைப் பற்றி அதில் கூறப்படவில்லை. எனவே, மணிமேகலை மகாயான பௌத்தக் கொள்கைகள் பரவுவதற்கு முன்பு எழுதப்பட்ட நூல் என்று விளங்குகின்றது. மகாயான பௌத்த மதத்தை உண்டாக்கியவர் நாகார்ஜுனர். இவரும் இவர் மாணவராகிய ஆரியதேவரும் மகாயான மதநூல்களை இயற்றி அந்த மதத்தைப் பரவச் செய்தனர். நாகார்ஜுனர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். எப்படி எனில், கூறுவோம்: 'குமார ஜீவர்' என்னும் ஆசிரியர் கி.பி. 399 முதல் 417 வரையில் பௌத்த நூல்களை எழுதினார் என்று, சீன தேசத்து நூல்களினின்றும் தெரிகின்றது. இந்தக் குமாரஜீவர், கி.பி. 400இல் நாகார்ஜுனர் சரிதத்தையும், அவர் மாணவ ராகிய ஆரிய தேவரது சரிதத்தையும் எழுதி யிருக்கின்றார். எனவே இவரது காலத்துக்கு ஒன்றிரண்டு நூற்றாண்டுக்கு முன்பு நாகார்ஜுனர் வாழ்ந்திருந்தவராதல் வேண்டும். நாகார்ஜுனர் ‘சாதவாகன அரசர் களின் காலத்தில் இருந்தவர் என்று தெரிகின்றபடியாலும், சாதவாகன அரசாட்சி கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் மங்கிவிட்டபடியாலும், நாகார்ஜுனர் அந்த நூற்றாண்டின் முற்பகுதியில், அதாவது கி.பி. 250இல் வாழ்ந்திருந்தவராதல் வேண்டும். ஆசிரியர் கீத் (Prof. Ketth) என்பவர், நாகார்ஜுனர் ஏறக்குறையக் கி.பி. 200-இல் வாழ்ந்திருந்தவர் என்று கூறுவதும் இதனை ஆதரிக்கின்றது. எனவே, நாகார்ஜுனர் கி.பி. 200-250 ஆண்டுகளுக்கு இடைப் பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது தெளிவாகின்றது. மணிமேகலையில் 'சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதை'யில் தமிழ்நாட்டிலிருந்த பல்வகைச் சமயங்களைப் பற்றிக் கூறுகின்ற சீத்தலைச் சாத்தனார், ஈனயான மதத்துக்கு மாறுபட்ட கொள்கைகளையும் தத்துவங்களையும் உடைய மகாயான மதத்தைப் பற்றிக் கூறாதிருப்பது, நாகார் ஜுனரது