உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

231

யும் குருபரம்பரப்பிரபாவம் முதலிய நூல்களையும் இயற்றினார்கள். வடமொழியில் அல்லாமல் தமிழும் அல்லாமல் இரண்டுங் கலந்த கலப்பட மொழியில் எழுதப்பட்டிருந்தபடியால் அந் நூல்களை வடமொழி யாளரும் படிப்பதில்லை. தமிழ் மொழியாளரும் படிப்பதில்லை. இரண்டு மொழிகளையும் கற்ற வைணவ பக்தியுள்ள ஒரு சிலர் (நூற்றுக்கு ஒருவர் இருவர்) பாராயணம் செய்து வருகின்றார்கள். மணிப் பிரவாள வியாக்கியானம் பலருக்கும் பயன்படாதபடியால் இப்போது அவற்றைத் தமிழில் எழுதிச் சென்னைப் பல்கலைக்கழகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். எனவே, பௌத்தர் (சமணர்) உண்டாக்கி யமைத்த மணிப்பிரவாள நடை மறைந்து வருகிறது.

பெருந்தொண்டு

பௌத்தர் (சமணருங்கூட) தமிழ் மொழிக்குச் செய்த பெருந் தொண்டு என்னவென்றால் அவர்கள் தமிழில் விருத்தப்பாக்களைப் புதிதாக அமைத்தது தான். சங்க காலத்தில் இல்லாத விருத்தப் பாக்களை இவர்கள் புதிதாக அமைத்துக் கொடுத்தார்கள். பிற்காலத்துத் தமிழ் நூல்கள் எல்லாம் பெரும்பாலும் விருத்தப்பாக்களினால் இயற்றப்பட்டவை. விருத்தப்பா அமைப்பையும் அப்பாக்களினால் புதிய இலக்கியங்களை எழுதும் முறையையும் வகுத்தவர் பௌத்தரும், சமணருமாவர். இதற்காகத் தமிழுலகம் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.