உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

வீரசோழியம்: இஃது இலக்கண நூல். முழுவதும் கிடைத்திருக் கிறது. வீரசோழன் என்னும் சோழ அரசன் பெயரால் இயற்றப்பட்டது. இதன் ஆசிரியர் புத்தமித்திரர் என்பவர். இவருடைய மாணவராகிய பெருந்தேவனார் இதற்கு உரை எழுதியிருக்கிறார். கி.பி. பதினோராம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல் இது. வீரசோழியக் காரிகை என்னும் பெயரும் இதற்கு உண்டு. எழுத்ததிகாரம், பொருளுதிகாரம், யாப்பதி காரம், அணி அதிகாரம் என்னும் அதிகாரங்களை உடையது. இதற்கு எதிர் நூல் என்று வேறு பெயரும் உண்டு.

வீர சோழியம் வழக்கிழந்து போன நூல். இதில் வடமொழி இலக்கணத்தையும் புகுத்தியிருக்கிற படியால் இதைத் தமிழர் ஏற்றுக் கொள்ளவில்லை. பெயரளவுக்கு ஒரு நூலாக இருந்து வருகிறது.

தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர் பாலி மொழியிலிருந்து சில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். அவற்றைச் சம்பு என்றும் நடையில் எழுதியதாகத் தெரிகின்றது. சம்பு என்பது செய்யுளும் உரையும் கலந்த நடை. இந்த நூல்களை இயற்றுவதற்காகப் பௌத்தர், கிரந்த எழுத்து என்னும் ஒரு வகை எழுத்தை உண்டாக் கினார்கள். (கிரந்த எழுத்தை உண்டாக்குவதற்குப் பௌத்தர் காரணமாக இருந்தது போலவே, சமண சமயத்தாரும் இந்த எழுத்தை உண்டாக்கக் காரணமாக இருந்தார்கள்.) இந்தக் கிரந்த எழுத்து பிராகிருத மொழி நூல்களைத் தமிழில் எழுத உதவியாக இருந்தது. பிற்காலத்தில் வட மொழி நூல்களை எழுதவும் இது பயன்படுத்தப்பட்டது. (ஒருகாலத்தில் தென்னிந்தியாவில் வடமொழி நூல்களை எழுதவும் படிக்கவும் உபயோகப்படுத்திய இந்தக் கிரந்த எழுத்து இக்காலத்தில் மறைந்து வருகிறது. கிரந்த எழுத்துக்களுக்குப் பதிலாக இப்போது நாகரி எழுத்துகளைப் பயன்படுத்துகிறார்கள். அடுத்தத் தலைமுறையில் கிரந்த எழுத்து அடியோது மறைந்து போகும் என்று துணிந்து கூறலாம்.)

கிரந்த எழுத்துக்களின் உதவியினால் பௌத்தர் மணிப்பிரவாள நடையில் சில நூல்களை எழுதினார்கள். அந்த நூல்கள் இப்போது ஏனைய நூல்களைப் போலவே மறைந்து விட்டன. சமணரும் மணிப்பிரவாள நடையில் ஸ்ரீபுராணம் முதலிய நூல்களை எழுதி யுள்ளனர். அந்த நூல்கள் இப்போதும் கிடைக்கின்றன. பௌத்தரும் சமணரும் உண்டாக்கிய கிரந்த எழுத்து மணிப்பிரவாள நடையைத் தமிழர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிற்காலத்தில் வைணவர் மணிப் பிரவாள நடையில் நாலாயிரப் பிரபந்தத்துக்கு உரை (வியாக்கியானம்)