உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

பௌத்தர்களில் இல்லறத்தாரும் துறவறத்தாரும் புத்தர் தர்மம் சங்கம் என்னும் மும்மணிகளைச் சரணம் (அடைக்கலம்) அடைய வேண்டும். இதற்குத் திரிசரணம் என்பது பெயர். திரிசரணத்தின் பாலி மொழி வாசகம் இது.

புத்தம் சரணங் கச்சாமீ

(புத்தனிடம் அடைக்கலம் புகுகிறேன்.)

தம்மம் சரணம் கச்சாமீ

(தர்மத்திடம் அடைக்கலம் புகுகிறேன்)

சங்கஞ் சரணங் கச்சாமீ

(சங்கத்தினிடம் அடைக்கலம் புகுகிறேன்.)

இதை மூன்று முறை சொல்ல வேண்டும். அதாவது மும்மணியை மூன்று முறை வணங்க வேண்டும். "முத்திற மணியை மும்மையின் வணங்கி” என்பது மணிமேகலை வாக்கு.

பௌத்த பிக்ஷுக்கள் தசசீலத்தை (பத்து வகையான ஒழுக் கத்தை) மேற்கொள்ள வேண்டும். தச சீலங்களாவன: 1. கொல்லாமை. 2. கள்ளாமை. 3. பிறனில் விழையாமை, 4. பொய் சொல்லாமை, 5. கள்ளுண்ணாமை. (இவை பஞ்ச சீலம் எனப்படும் . இவை இல்லறத் தாருக்கும் துறவறத்தாருக்கும் பொது. இவற்றுடன் வேறு ஐந்து சீலங் களைத் துறவிகள் மேற்கொள்ள வேண்டும். அவை: 6. உண்ணத் தகாத நேரத்தில் உணவு கொள்ளாமை, 7. இசை, ஆடல், பாடல், நாடகம் முதலியவற்றைக் கேட்டதும் பார்த்தலும் செய்யாமை, 8. சந்தனம், மலர் முதலிய நறுமணப் பொருள்களை நீக்குதல், 9. உயரமானதும் விசால மானதுமான ஆசனங்களை நீக்குதல், 10. நாணயங்களையும் வெள்ளி பொன் முதலிய விலையுயர்ந்த பொருள்களையும் நீக்குதல் என்பன.

திரிசரணம் தச சீலம் இவற்றை மேற்கொண்டால் மட்டும் போதாது. நிர்வாண மோக்ஷம் அடைவதற்கு இவற்றுடன் நான்கு வாய்மைகளையும் எண் வகையான நெறிகளையும் கைக் கொண்டு ஒழுக வேண்டும். நான்கு வாய்மைகளை ஆரியசத்தியம் என்றும் எட்டு வகையான நெறிகளை ஆரிய அஷ்டாங்க மார்க்கம் என்றும் கூறுவார்கள். (ஆரிய என்றால் உயர்ந்த என்பது பொருள்.)

நான்கு வாய்மைகளாவன: 1. துன்பம், 2. துன்ப காரணம், 3. துன்ப நீக்கம், 4. துன்பம் நீக்கும் வழி என்பன. இவற்றைத் துக்கம், துக்க