உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

243

காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்றும் கூறுவார்கள். இவற்றை விளக்கிக் கூறலாம்:

1.

2.

3.

4.

அ.

துக்கம் (துன்பம்):- பிறப்பு துன்பமானது. நோய்கள் துன்பத்தைத்

கின்றன. நரை, திரை, மூப்பு, மரணம் முதலியனவும் துன்பத்தைத் தருகின்றன. நாம் விரும்பாத பொருள்கள் நமக்குத் துன்பம் தருகின்றன. நாம் விரும்பும் பொருள்கள் கிடைக்காமற் போனால் துன்பம் உண்டாகும். சுருங்கக் கூறினால் ஐம்புலன்களினால் துன்பம் ஏற்படுகிறது.

துக்க காரணம்:- பிறவிக்குக் காரணமாகிய ஆசை, ஐம்புலன் களைத் துய்க்கும் விருப்பம், தெய்வலோகத்தில் பிறந்து பெரிய இன்ப சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் நினைப்பு, இந்த வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு, தற்கொலை செய்து கொள்வது முதலியன துன்பத்திற்குக் காரணங்களாகும்.

துக்க நிவாரணம்:- அறியாமையாகிய அஞ்ஞானத்தை ஒழிப்பதும், ஆசை, அவா முதலிய பற்றுக்களை நீக்குவதும் துன்ப நீக்கம் ஆகும்.

துக்க நிவாரண மார்க்கம்:- எட்டு வித உயர்ந்த வழிகளாகிய அஷ்டாங்க மார்க்கத்தை மேற்கொண்டு நடப்பதே துன்பத்தை நீக்கும் வழியாகும். (அஷ்டாங்க மார்க்கம் பின்னர் விளக்கப் படும்).

வாய்மை விளக்கம்

1. துக்கம்:

பிறப்பு, மூப்பு, நோய், மரணம் முதலிய எட்டு வகையான துக்கம். ஆ. துக்கம், அநித்தியம், அனாத்மம்.

அ.

2. துக்க காரணம்:

இறந்த கால காரணம்.

1. பேதைமை (அவிஜ்ஜை), 2. செய்கை (சம்ஸ்காரம்). ஆ. நிகழ்கால காரியம்.

3. உணர்வு (விஞ்ஞானம்), 4. அருவுரு (நாமரூபம்), 5. வாயில் (ஷ்டாயதனா), 6. ஊறு (ஸ்பரிசம்), 7. நுகர்வு (வேதனை).