உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இ.

I·•T•.

Ë

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

நிகழ்கால காரணம்.

8. வேட்கை (திருஷ்ணை), 9. பற்று (உபாதானம்), 10. கருமத் தொகுதி (பலம்).

எதிர்கால காரியம்.

11. தோற்றம் (ஜாதி), 12. மூப்பு, சாக்காடு (ஜரா மரணம்).

3. துக்க நிவாரணம்:

அ. அர்ஹந்த நிலையை அடைவது.

ஆ.

நிர்வாண மோக்ஷம் பெறுவது.

4. துக்க நிவாரண மார்க்கம்: எட்டுவித நெறி, (அஷ்டாங்க மார்க்கம்).

எட்டுவித உயர்ந்த வழியாகிய அஷ்டாங்க மார்க்கத்தைக் கூறுவோம். அவையாவன: 1. நற்காட்சி, 2. நல்லொழுக்கம், 3. நல் வாய்மை, 4. நற்செய்கை, 5. நல்வாழ்க்கை, 6. நன்முயற்சி, 7. நற்கடைப்பிடி 8. நற்றியானம் என்பன. இவற்றை முறையே பாலி மொழியில் ஸம்மா, திட்டி, ஸம்மா ஸங்கப்போ, ஸம்மா வாசா, ஸம்மா கம்மதோ, ஸம்மா ஆஜீவோ, ஸம்மா வியாயாமோ, ஸம்மா ஸதி, ஸம்மா ஸமாதி என்று கூறப்படும். இவற்றை விளக்குவோம்.

1. நற்காட்சி (ஸம்மா திட்டி): மேலே கூறப்பட்ட நான்கு வாய்மை களை (சத்தியங்களை) நன்றாக ஆழ்ந்து சிந்தித்து அறிந்து கொள்வது அன்றியும்,

‘பேதைமை செய்மை யுணர்வே யருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை

பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வருத்த இயல்பீ ராறும்

பிறந்தோர் அறியில் பெரும்பே றறிகுவர் அறியார் ஆயின் ஆழ்நர கறிகுவர்’

(மணிமேகலை, 14-ஆம் காதை) என்பதை ஐயந்திரிபறத் தெரிந்து கொள்வதே நற்காட்சி எனப்படும். நல்லொழுக்கம் (ஸம்மா ஸங்கப்போ):- தன்னலத்தை மறந்து எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருத்தல். வாழ்க்கையின் நோக்கம் பிறவித் துன்பத்திலிருந்து (துக்கத்திலிருந்து)

2.