உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

3.

4.

5.

6.

7.

8.

245

விடுதலையடைவது தான் என்னும் எண்ணத்தோடு எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பையும் நல்லெண்ணத்தையும் வளர்த்தல் சிற்றின்ப எண்ணங்களை ஒழித்தல்.

நல்வாய்மை (ஸம்மா வாசா):- பொய் சொல்லுதல், புறங்கூறுதல், கடுமொழி பேசல், அவதூறு கூறல், பயனில்லாப் பேச்சுகளைப் பேசுதல் முதலியவற்றை நீக்கி உண்மையையே பேசுவது. பேசும்போது அன்பாகவும் இனிமையாகவும் பேசுதல். நற்செய்கை (ஸம்மா கம்மதோ):- கொலை செய்தல், களவு செய்தல், காமம் விழைதல் முதலிய பாவமும் தீமையும் ஆன செயல்களைச் செய்யாமல் நல்ல செயல்களைச் செய்து கொண்டு ஒழுக்கமாகவும் அமைதியாகவும் இருத்தல்.

நஞ்சுப்

நல்வாழ்க்கை (ஸம்மா ஆஜிவோ):- அடிமைகளை விற்பது, மாமிசத்துக்காகப் பிராணிகளை விற்பது, மயக்கந் தருகிற கள், மதுபானம், அபினி முதலிய பொருள்களை விற்பது, நோய் உண்டாக்குவதும் உயிர் போக்குவதும் ஆன பொருள்களை விற்பது, கொலைக்குக் காரணமான கத்தி, ஈட்டி, வாள், அம்பு முதலிய ஆயுதங்களை விற்பது, சூதுவாது செய்வது ஆகிய செயல்களைச் செய்யாமல் நல்ல செயல்களை மட்டும் செய்வது.அதாவது உயிர்களுக்குத் துன்பஞ் செய்யும் செயல்களைச் செய்யாமல் அகிம்சையை மேற்கொண்டு வாழ்தல்

நன் முயற்சி (ஸம்மா வியாயாமோ): தீய எண்ணங்களும் தீய செயல்களும் தன்னிடம் உண்டாகாமல் தடுத்து நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் வளர்ப்பது நன் முயற்சி எனப்படும். தீய எண்ணங்கள் மனத்தில் தோன்றினால் அவற்றை முயற்சியோடு தடுத்து நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் வளர்க்க வேண்டும்.

நற்கடைப்பிடி (ஸம்மா ஸதி):- உடம்பின் நிலையாமையை ஆழ்ந்து சிந்தித்து ஐம்பொறி ஐம்புலன் இவைகளின் உண்மைத் தன்மையை உணர்தல். இவ்விதம் சிந்திப்பது மெஞ்ஞானம் பெறுவதற்கு உதவியாகும்.

நற்றியானம் (ஸம்மா ஸமாதி):- மனத்தை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். மனதைச் சிதறவிடாமல் அடக்கிக் குசல (நல்ல)