உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

57

கேட்டார்கள். சிலர், “இவர் மன்மதன்” என்றார்கள். சிலர், இவர் “சந்திரகுமரன்” என்றார்கள். சிலர், “இல்லை இல்லை; இவர் சூரிய குமரன்” என்றார்கள். மற்றும் சிலர், இவர் “சூரிய குமரன் அல்லர்; பிரமன்” என்றார்கள், அறிவுள்ள சிலர், "இவர் மனிதராகப் பிறந்த புண்ணிய புருஷர்; இவர் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய மகான் என்று சொன்னார்கள்.

அப்போது விம்பசார அரசனுடைய சேவகர் இவரைக்கண்டு வியப்படைந்து அரசனிடம் விரைந்து சென்று, "தேவ! துறவி ஒருவர் நகரத்துக்குள் வந்து வீடு வீடாகப் பிச்சை ஏற்கிறார். அவரைப் பார்த்தால் தேவகுமாரனோ, நாக்குமாரனோ, கருட குமாரனோ அல்லது மனித குமரன்தானோ என்று கூறமுடிய வில்லை” என்று தெரிவித்தார்கள். அரசன் அரண்மனையின் உப் பரிகையில் சென்று தெருவில் பிச்சை ஏற்கும் கௌதம துறவியைப் பார்த்தார். துறவியின் கம்பீரமான தோற்றத்தையும், அமைதியும் பொறுமையுமுள்ள நிலையையும் கண்டு வியப்படைந்தார். பிறகு அரசன் சேவகரைப் பார்த்து, "இவர் தேவ குமாரனாக இருந்தால், நகரத்தைவிட்டு நீங்கும்போது ஒருவருக்கும் தெரியாமல் திடீரென மறைந்துவிடுவார். நாக குமாரனாக இருந்தால் பூமிக்குள் மறைந்து விடுவார். கருடகுமாரனாக இருந்தால் ஆகாயத்தில் மறைந்துவிடுவார். மனிதனாக இருந்தால் தம்மிடம் உட்கொள்வார். நீங்கள் இவரைப் பின் தொடர்ந்துபோய்க் கூர்ந்து பார்த்து இவர் செய்கையை அறிந்து வந்து சொல்லுங்கள்" என்று கூறி அனுப்பினான். அரசன் உத்தரவுப்படியே சேவகர்கள் சென்றார்கள்.

பூ

உள்ள உணவை

வீதியிலே வீடுவீடாகச் சென்று பிச்சை ஏற்ற கௌதமத் துறவி, போதுமான உணவு கிடைத்தவுடன், தாம் வந்தவழியே நகரத்தைவிட்டு வெளியே வந்தார். வந்தவர் சற்றுத் தொலைவில் உள்ள பண்டவ மலைக்குச் சென்று அதன் அடிவாரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து தாம் பிச்சை ஏற்றுக் கொண்டுவந்த உணவை உண்ணத் தொடங்கினார். பிச்சைச் சோறு அவருக்கு அரு வெறுப்பை உண்டாக்கிற்று. இவ்வித எளிய உணவைக் கண்ணினாலும் கண்டிராத இவர், இதை எப்படி உண்ண முடியும்? உண்ண முடியாமல் வாய் குமட்டியது. இன்னும் தான் அரச குமாரன் அல்லர் என்பதையும், எல்லாவற்றையும் துறந்த துறவி என்பதையும் தமக்குத் தாமே சிந்தித்துத் தெளிந்து தமக்கிருந்த அருவெறுப்பை நீக்கிக்கொண்டு அந்த உணவை உட்கொண்டார்.